வாடிக்கையாளர் மனநிறைவு
வாடிக்கையாளர் மன நிறைவு என்பது வாடிக்கையாளர் அனுபவத்தை மதிப்பிடுவதற்கு சந்தைப்படுத்துதலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல். இது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்கின்றன அல்லது மீறுகின்றன என்பதற்கான அளவீடு ஆகும். வாடிக்கையாளர் மன நிறைவு என்பது "ஒரு நிறுவனம், அதன் தயாரிப்புகள் அல்லது அதன் சேவைகள் (மதிப்பீடுகள்) ஆகியவற்றில் குறிப்பிட்ட திருப்தி இலக்குகளைக் கடக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அல்லது மொத்த வாடிக்கையாளர்களின் சதவீதம்” என வரையறுக்கப்படுகிறது.[1]
எதிர்பார்ப்பு உறுதிப்படுத்தல் கோட்பாடு வாடிக்கையாளர் மன நிறைவை விளக்குவதற்கு மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டு கட்டமைப்பாகும். இருப்பினும், ஒப்புரவுக் கோட்பாடு, கற்பித்துக் கூறுதல் கோட்பாடு, எதிர்நிலைக் கோட்பாடு, தன்மயமானல் கோட்பாடு போன்ற பிற கட்டமைப்புகளும், வாடிக்கையாளர் திருப்தியைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் பயன்படுத்தப்படுகின்றன.[2][3][4] எவ்வாறாயினும், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர் மன நிறைவு தொடர்பான ஆய்வுகள் சமூகத்தின் ஆசை, கிடைக்கக்கூடிய தன்மை, நினைவாற்றல் வரம்புகள், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பதிலளிப்பவர்களின் மனநிலை, அத்துடன் வாடிக்கையாளர் அனுபவத்தின் தாக்கம், உணர்விழந்த நிலையில் பதிலளித்தல் மற்றும் மாறும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய சார்புகளின் குழப்பங்களால் பாதிப்புக்குள்ளாகின்றன.[5]
சந்தையிடல் பொறுப்புடைமை தர வாரியம், சந்தையிடல் திட்டத்தில் அதன் தற்போதைய பொது மொழியின் ஒரு பகுதியாக சந்தைப்படுத்தல் அளவீடுகளில் தோன்றும் வரையறைகள், நோக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது.[6] ஏறக்குறைய 200 மூத்த சந்தைப்படுத்தல் மேலாளர்களின் கருத்துக் கணிப்பில், 71 சதவீதம் பேர் தங்கள் வணிகங்களை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் வாடிக்கையாளர் மனநிறைவு அளவீடு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளனர். வாடிக்கையாளரின் மனநிறைவு வணிகத்தில் ஒரு முக்கிய செயல்திறன் குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது மற்றும் இது பெரும்பாலும் சமப்படுத்தப்பட்ட சமச்சீர் செயல்நிறைவு அட்டையின் ஒரு பகுதியாகும். வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்காக போட்டியிடும் ஒரு போட்டி சந்தையில், வாடிக்கையாளர் மனநிறைவென்பது ஒரு முக்கிய வேறுபடுத்தும் காரணியாகவக் காணப்படுகிறது மேலும், வணிக உத்தியின் முக்கிய அங்கமாக அதிகமாக மாறிவருகிறது.[7]
நோக்கம்
[தொகு]வாடிக்கையாளர் மனநிறைவு என்பது நுகர்வோர் பொருள்கள் அல்லது சேவைகளைப் பெறும் நோக்கங்கள் மற்றும் நம்பிக்கையின் ஒரு வழிகாட்டும் நிலைகாட்டியை வழங்குகிறது. "வாடிக்கையாளர் மனநிறைவு தரவு என்பது சந்தை உணர்வுகளின் அடிக்கடி சேகரிக்கப்பட்ட நிலைகாட்டிகளில் ஒன்றாகும். அவற்றின் முக்கிய பயன்பாடு இரண்டு பகுதிகளாக உள்ளன:"[8]
- "நிறுவனங்களுக்குள், இந்தத் தரவைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவை வாடிக்கையாளர்களைக் கவனிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய செய்தியைத் தருகின்றன, மேலும், அவர்கள் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளில் நேர்மறையான அனுபவத்தைக் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறார்கள்."
- "விற்பனை அல்லது சந்தைப் பங்கு நிறுவனம் தற்போது எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் குறிப்பதோடு, எதிர்காலத்தில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மேலும் பொருள்களை வாங்குவார்கள் என்பதற்கு மனநிறைவே சிறந்த நிலைகாட்டியாக இருக்கலாம். வாடிக்கையாளர் மனநிறைவு மற்றும் தக்கவைத்தல். மனநிறைவின் கிளைகள் உச்சநிலையில் மிகவும் வலிமையாக உணரப்படுகின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஐந்து-புள்ளி அளவீட்டில், "தங்கள் திருப்தியின் அளவை '5' என மதிப்பிடும் நபர்கள், திரும்பும் வாடிக்கையாளர்களாக மாற வாய்ப்புள்ளதோடு நிறுவனத்தின் புகழைப் பரப்பவும் செய்யக்கூடும்.மனநிறைவுடன் தொடர்புடைய இரண்டாவது முக்கியமான அளவுகோல் பரிந்துரை செய்ய விருப்பம். இந்த அளவீடு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. “கணக்கெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் எத்தனை விழுக்காட்டினர் அவர்கள் நண்பர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வணிகப் பெயரை அல்லது வணிகச் சின்னத்தைப் பரிந்துரைப்பார்கள் என்பதாகும்." வாடிக்கையாளர் மனநிறைவு பற்றிய முந்தைய ஆய்வில், ஒரு வாடிக்கையாளர் ஒரு தயாரிப்பில் மனநிறைவு அடைந்தால், அவர் அல்லது அவள் அதை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்குப் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Godovykh, Maksim; Tasci, Asli D. A. (2020-09-16). "Satisfaction vs experienced utility: current issues and opportunities" (in en). Current Issues in Tourism 23 (18): 2273–2282. doi:10.1080/13683500.2020.1769573. பன்னாட்டுத் தர தொடர் எண்:1368-3500. https://www.tandfonline.com/doi/full/10.1080/13683500.2020.1769573.
- ↑ Adams, J. Stacy (November 1963). "Towards an understanding of inequity.". The Journal of Abnormal and Social Psychology 67 (5): 422–436. doi:10.1037/h0040968. பன்னாட்டுத் தர தொடர் எண்:0096-851X. http://dx.doi.org/10.1037/h0040968.
- ↑ Kelley, Harold H. (February 1973). "The processes of causal attribution.". American Psychologist 28 (2): 107–128. doi:10.1037/h0034225. பன்னாட்டுத் தர தொடர் எண்:1935-990X. http://dx.doi.org/10.1037/h0034225.
- ↑ Anderson, Rolph E. (February 1973). "Consumer Dissatisfaction: The Effect of Disconfirmed Expectancy on Perceived Product Performance". Journal of Marketing Research 10 (1): 38. doi:10.2307/3149407. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2437. http://dx.doi.org/10.2307/3149407.
- ↑ Godovykh, Maksim; Tasci, Asli D. A. (2020-09-16). "Satisfaction vs experienced utility: current issues and opportunities" (in en). Current Issues in Tourism 23 (18): 2273–2282. doi:10.1080/13683500.2020.1769573. பன்னாட்டுத் தர தொடர் எண்:1368-3500. https://www.tandfonline.com/doi/full/10.1080/13683500.2020.1769573.
- ↑ http://www.commonlanguage.wikispaces.net/ பரணிடப்பட்டது 2019-04-05 at the வந்தவழி இயந்திரம் Material used from this publication in this article has been licensed under Creative Commons Share Alike and Gnu Free Documentation License. See talk.
- ↑ Gitman, Lawrence J.; Carl D. McDaniel (2005). The Future of Business: The Essentials. Mason, Ohio: South-Western. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-324-32028-2.
- ↑ Farris, Paul W.; Bendle, Neil T.; Pfeifer, Phillip E.; Reibstein, David J. (2010). Marketing Metrics: The Definitive Guide to Measuring Marketing Performance. Upper Saddle River, New Jersey: Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-705829-2..