உள்ளடக்கத்துக்குச் செல்

வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம்
ஊனமுற்றவர்களால்எளிதில்  பராமரிக்ககூடிய வளா்க்கப்பட்ட நாற்றங்கால்

வளா்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம் என்பது மண்ணில் மூன்று நான்கு அடி நீளமுள்ள(1.0 – 1.2 அ) சற்றே தரையை விட உயர்வான படுக்கைகளில் அமைக்கப்பட்டிருக்கும். இது எந்த நீளத்திலும் அல்லது வடிவத்திலும் இருக்கும் இந்த மண்ணானது சுற்றி உள்ள மண்ணை விட (சுமார் 6 அங்குலமாவது) மேலே உயர்த்தப்படுகிறது.[1] சில சமயங்களில் மண்ணைச் சுற்றி மரம், கல் அல்லது கற்காரைத் தொகுதிகள் கொண்ட ஒரு சட்டகத்தால் இணைக்கப்பட்டுள்ளது.[2] மேலும் இந்த மண் உரம் மூலம் செறிவூட்டப்பட்டிருக்கலாம். காய்கறி தாவரங்கள் மரப்பார்த்த வடிவங்களில் இடைவெளியாக உள்ளன. இது வழக்கமான வரிசை தோட்டக்கலை விட மிகவும் நெருக்கமாக உள்ளது. காய்கறிகளை முழுமையாக வளர்க்கும்போது இடைவெளி ஒன்றுக்கொன்று நெருங்கி உள்ளதால் களைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. வளர்க்கப்பட்ட படுக்கைகள் பலவிதமான பயன்களை உற்பத்தி செய்கின்றன. அவை நடவு பருவத்தை நீட்டிக்கின்றன.ஒழுங்காக வடிவமைக்கப்பட்டு அவை நடப்பட்டிருப்பதால் களைகள் குறைகின்றன. மேலும் வேறு மண்ணை பயன்படுத்த வேண்டிய தேவையும் குறைகிறது. தோட்டக்காரர் உயர்த்தப்பட்ட படுக்கைகளில்; நடக்காததால் மண் குறுகலாகாமல் வேர்கள் எளிதாக வளர்ந்து வருகின்றன. [3] நெருங்கிய இடைவெளி மற்றும் இயற்கை உரம் உபயோகப்படுத்துவதால் உயர்த்தப்பட்ட படுக்கைகள் அதிக விளைச்சல் தரும். இந்த வகையான பயிர்வளர்க்கும் முறையால் வயதான உடல் ஊனமுற்றவர் கூட இந்த வகையான பயிர்களை செய்யலாம்    

மேலும் காண்க[தொகு]

வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம் வண்ணம் தீட்டப்பட்ட மரக்கட்டைகளால் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hughes, Megan McConnell (2010). Better Homes & Gardens Vegetable, Fruit & Herb Gardening. Wiley. pp. 68–69. பார்க்கப்பட்ட நாள் March 2, 2012.
  2. Nones, Raymond (2010). Raised-Bed Vegetable Gardening Made Simple. Countryman Press. பார்க்கப்பட்ட நாள் March 2, 2012.
  3. Whiting, David E. (1991). The desert shall blossom: a comprehensive guide to vegetable gardening in the Mountain West. Horizon. pp. 41–42. பார்க்கப்பட்ட நாள் March 2, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]