உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டக்கச்சி நட்பு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டக்கச்சி நட்பு வட்டம் என்பது ஒரு இணையக் குழுமம். வட்டக்கச்சி என்பது இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு விவசாயக் கிராமமாகும். இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலைகளாலும் இன்னோரன்ன பல காரணங்களாலும் இப்பிரதேசத்தை சேர்ந்த பலர் நாட்டை விட்டுக் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இவ்வாறு குடிபெயர்பவர்கள் தங்களுக்குள்ளும், தாயகத்தில் வாழும் தங்கள் உறவுகளுக்குள்ளும் தொடர்புகளைப் பேணுவது என்பது பல்வேறு காரணங்களால் சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சமூக வலையமைப்பே "வட்டக்கச்சி நட்பு வட்டம்" ஆகும்.

நோக்கம்[தொகு]

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் இப்பிரதேசம் சார்ந்த மக்களுக்கிடையில் ஓர் உறவுப்பாலத்தை தோற்றுவிப்பது இக்குழுமத்தின் பிரதான நோக்கமாகும்.


இணையத்தளம்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]