வடசிறுவளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடசிறுவளூர் கிராமம் (Vadasiruvalur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகாவில் அமைந்துள்ளது. துணை மாவட்டத் தலைமையகமான சங்கராபுரத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் (தாசில்தார் அலுவலகம்) மாவட்டத் தலைமையகமான விழுப்புரத்திலிருந்து 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, வடசிறுவளூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.

தில்லைநாயகி உடனான திருக்கோட்டீசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஊரின் வடக்கே வேளியம்மன் ஆலயமும், தெற்கே நாச்சியம்மன் ஆலயமும், மேற்கே பச்சையம்மன் ஆலயமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புத் தகவலின்படி வடசிறுவளூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 633332. ஆகும். கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 585.72 எக்டேராகும். வடசிறுவளூரில் மொத்த மக்கள் தொகை 3,081 ஆக இருந்தது. இதில் ஆண் மக்கள் தொகை 1,510 ஆகவும், பெண் மக்கள் தொகை 1,571 ஆகவும் இருந்தது. கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 62.64% ஆகும், இதில் 72.38% ஆண்கள் மற்றும் 53.28% பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர் வடசிறுவளூர் கிராமத்தில் சுமார் 750 வீடுகள் இருந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vadasiruvalur Village Population - Sankarapuram - Viluppuram, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடசிறுவளூர்&oldid=3725267" இலிருந்து மீள்விக்கப்பட்டது