உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு தெற்கு வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு தெற்கு வழித்தடம் சிங்கப்பூர் துரிதக் கடவு சேவையின் முதலாவது வழித்தடமாகும். தற்பொழுது இத்தடத்தின் நீளம் 44 கிலோமீட்டர் மற்றும் இதில் 25 ரயில் நிலையங்கள் உள்ளன. இதனால் இதுவே சிங்கப்பூரின் இரண்டாவது நீளமான வழித்தடமாகும். இதன் தொடக்க நிலையத்தில் இருந்து கடைசி நிலையம் செல்ல ஒரு மணிநேரம் எடுக்கின்றது. இந்த வழித்தடத்தின் நிறம் சிவப்பு ஆகும். இந்த தடத்தின் சேவையை எஸ் எம் ஆர் டி கூட்டு நிறுவனம் வழங்குகிறது.

இதன் பெயர் காட்டுவது போல், இந்த வழித்தடம் சிங்கபூரின் வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கிறது. இடையில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையத்தில், கிழக்கு மேற்கு வழித்தடம் உடனான சந்திப்பு உள்ளது.

வட்டப்பாதை வழித்தடத்திற்கு மாற விரும்புவோர், பீஷான் மற்றும் டோபி காட் ஆகியவற்றில் உள்ள சந்திப்புகளை பயன்படுத்தலாம்.


மேற்கோள்கள்

[தொகு]

வெளினைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_தெற்கு_வழித்தடம்&oldid=3608685" இலிருந்து மீள்விக்கப்பட்டது