வசந்தி சத்துராணி
வசந்தி சத்துராணி Vasanthi Chathurani | |
---|---|
பிறப்பு | வசந்தா டொரீன் பீட்டர்சன் அக்டோபர் 18, 1962 இலங்கை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கம்பகா புனித சிலுவைக் கல்லூரி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1978–இன்று |
விருதுகள் | சரசவிய சிறந்த நடிகைக்கான விருது (1980), சுமதி பிரபல நடிகைக்கான விருது (1997) சுமதி சிறந்த தொலைக்காட்சி நடிகைக்கான விருது (1998) |
வசந்தி சத்துராணி (Vasanthi Chathurani, சிங்களம்: වසන්ති චතුරානි) பல விருதுகளை பெற்ற சிறந்த இலங்கை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பெண் கலைஞரான சுமத்ராவின் எகுனு லாமாய் என்ற படத்தில் தன் சிறு வயதிலேயே சிறப்பாக நடித்தார். பிரபலமான எல்லோராலும் பாராட்டப்பெற்ற நிர்மலா கதாபாத்திரம் கங்கா அட்டாரா படத்தில் இறந்த முன்னாள் நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய குமாரணதுங்கவுடன் 1980 ஆண்டு இணைந்து நடித்தார். 1980 ஆம் ஆண்டு சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருதை சிங்கள சினிமா துறையினால் வழங்கப்பட்டது.
சத்துராணி தனது திறமையை தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிகளிளும் நிலைநாட்டினார். இதில் குறிப்பாக இதி பஹான், கிராயா, காடுல்லா, கஜாமன் பவதா முதலிய தொலைக்காட்சி நாடகங்கள் ஆகும். இவர் சுமதி சிறந்த பிரபல நடிகை விருதை 1997 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகை விருதை 1998,2002,2009 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]வசந்தா டோரின் பிட்டர்சன் அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள் 1962 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். இவர் தன் ஆரம்ப பள்ளி படிப்பை புனித சிலுவை பள்ளி,கம்பகாவில் படித்தார்.[2]
தொழில்
[தொகு]வசந்தி சத்துராணி தன் பள்ளி பருவத்திலேயே 1978 ஆம் ஆண்டு பெண் இயக்குநர் சுமித்ராவின் எகுனு லாமாய் என்ற படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இதுவே இவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய முதல் படமாக அமைந்தது. கங்கா அட்டாரா முதலிய விருது பெற்றுத்தரும் படங்களில் நடிக்கலானார். கங்கா அட்டாராலில் மனநிலை பாதித்த பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1979 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் சிறிது காலம் இவரின் கலைப்பயணத்தில் இடைவெளி ஏற்பட்டது. அடாரா ஹாசுனா திரைப்படம் மூலம் மறுபடியும் தன் ரசிகர்களால் வயவேற்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் படமான வெஹென்டே வாலுவா படத்தில் மாலினி பொன்சேகா, சனத் குணதிலக்க, ரவீந்திர ரந்தெனியா உடன் இணைந்து நடித்துள்ளார்.
சத்துராணி தற்பொழுது பல தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்துவருகிறார். இதில் குறிப்பாக அக பிபி மால், செடோனா மற்றும் ரங்கா சோபா ஆகிய மூன்று நாடகங்களை பிரேமகுமாரா ஜெயவர்த்தனா இயக்கினார். இக் கதைகளை சுமித்ரா ரகுபதி எழுதினார். மனோ மந்திரா, காடுல்லா, துர்கந்தயா, கிரியா, அக பிபி மால், இதிபஹான், கஜமான் நோநா போன்ற பல வகையிலான தொலைக்காட்சி தொடர்களை வசந்தி சாதுராணி நடித்துள்ளார்.[3]
திரைப்பட வரலாறு
[தொகு]- இலங்கை சினிமாவில் இலங்கை திரைப்படத்தின் எண்ணிக்கை குறிக்கிறது.[4]
ஆண்டு | எண்ணிக்கை | படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1978 | 390 | எகுனு லமாய் | குசும் லியநாகே | |
1978 | 408 | அகாசின் பூலவாடா | புஷ்பாவின் சகோதரி | |
1979 | 415 | அமல் பிசோ | ||
1979 | 426 | சுடு மனிக்யா | வஜிரா | |
1980 | 449 | சிரிபோ ஐயா | பிஸோ | |
1980 | 452 | பரித்யாகா | ரோகிணி | |
1980 | 455 | கங்கா அட்டாரா | நிர்மலா அட்டபட்டு | சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருது |
1980 | 463 | பாரா டிகி | மது | |
1980 | 460 | ஹெவனாலி அட மினிசு | பயாவதி | |
1980 | 462 | ஹன்சா விலக் | சாமந்தி வீரசிங்கே | |
1981 | 501 | சமவீணா | நிமல்கா 'நிம்மி' | |
1982 | 515 | அயாச்சனா | சரோஜினி | |
1982 | 536 | பிதிதி ஹதாரா | மல்லிகா | |
1984 | 585 | காகிலே ராஜிரூவோ | மகள் | |
1986 | 649 | டினுமா | சுஜாதா சேனரத் | |
1986 | 651 | அடாரா ஹாசுனா | ||
1987 | 659 | மங்கள திக்கா | திலினா | |
1988 | 680 | சாதனா | ||
1990 | 705 | சஹாரவே சிகினாயா | ||
1990 | 710 | மது சிகினா | மது | |
1990 | 715 | ஹிமாகிரி | மேனகா அபெய்திரா | |
1990 | 716 | வன பம்பாரா | ||
1990 | 836 | அவராகிரா | வசந்தா | |
1991 | 717 | உத்தரா டகுனா | சரோஜினி | |
1991 | 727 | ராஜா செல்லான் | ||
1992 | 754 | சிங்ஹ ராஜா | ||
1992 | 755 | கியாலா வடக் னா | குஷாரி | |
1992 | 761 | Kula Geya | சுஜிதரா | |
1992 | 771 | சார்ஜண்ட் நல்லதம்பி | கலாவதி | |
1993 | 776 | சசாரா சரிசரனா தேக் ஒபா மஹி | ||
1994 | 799 | அம்பு சமயோ | சுபத்திரா | |
1994 | 801 | தவாலா புஸ்பயோ | சோபா | |
1995 | 836 | அவராஹிரா | வசந்தா | |
1996 | 847 | ரத்திரன் மல்லி | ||
1996 | 856 | துன்வேனி அஹே | ||
1997 | 870 | துவதா மவஹா மிசா | ||
1997 | 874 | புனருத்பதியா | ||
1997 | 887 | விசிடிலா | காவல் ஆய்வாளரின் மகள் | |
1998 | 902 | சுலிடாஹி பூமிகவா | ||
1999 | 912 | பஹுபராயா | ||
2001 | 953 | கினிஹிரியி மால் | ரேனுகா | |
2001 | 960 | போருன்டவா | பூஜா | |
2002 | 975 | சன்சாரா பிராத்தனா | ||
2002 | 980 | சுடு சீவனலே | பொடி மெனிக்கா | |
2003 | 1020 | விகன்டி வாலுவா | சீதா | |
2003 | 1023 | சக்மேன் மாலுவா | ||
2004 | 1029 | சுமேதா | ||
2007 | 1097 | யஹாலுவா | பர்கர் இசை ஆசிரியை | பின்னணிப் பாடகர் |
2011 | 1154 | சேலஞ்சஸ் | ரானுகின் அம்மா | |
2018 | 1302 | வைஷ்ணவி | ||
TBD | கொன்டதினியே ஹமுதுருவா[5] | |||
TBD | குனநந்தா ஹிமி மிகுத்துவத்தே |
பெற்ற விருதுகள்
[தொகு]1980 ஆம் ஆண்டு - சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருது கங்கா அட்டாராவுக்காக
1997 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த பிரபல நடிகைக்கான விருது
1998 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது துர்கந்தையாவுக்காக.
2002 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது குலவம்யாவுக்காக.
2005 ஆம் ஆண்டு - ராய்கபம் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது செடோனாவுக்காக.
2006 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது அக பிபி மால்க்காக.
2006 ஆம் ஆண்டு - ராய்கபம் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது அக பிபி மால்க்காக.
வெளி இணைப்புகள்
[தொகு]- Vasanthi Chathurani's Biography in Sinhala Cinema Database
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Vasanthi Chathurani
- Evergreen Sri Lankan Actress Vasanthi Chathurani
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vasanthi - Reaching Even Greater Heights". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
- ↑ What's in a name?
- ↑ "Tale of Vasanthi Chathurani". Sarasaviya. Archived from the original on 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Lankan Cinema History". National Film Corporation of Sri Lanka. Archived from the original on 23 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Siritunga gives life to Kondadeniye Hamuduruwo". Daily News. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.