லிபியா குரூசோ
லிபியா குரூசோ Libia Grueso | |
---|---|
தேசியம் | கொலம்பியர் |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் செயற்பாட்டாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2004) |
லிபியா குரூசோ (Libia Grueso) கொலம்பியாவின் துறைமுக நகரமான புவனவெண்டுராவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் மற்றும் சமூக உரிமை ஆர்வலராவார். ஆப்பிரிக்க-கொலம்பிய சமூகங்களின் சமூக உரிமைகளுக்காக இவர் போராடுகிறார். குரூசோ கருப்பின சுற்றுச்சூழல் என்ற அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார். உலகளாவிய பொருளாதாரத்தின் அழுத்தங்களுக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலை வென்றெடுப்பதற்கான முக்கியமான அடிமட்ட இயக்கங்களில் ஒன்றாக இவ்வியக்கம் செயல்பட்டு வருகிறது.
நாட்டின் கறுப்பின கிராமப்புற சமூகங்களுக்கான பிராந்திய உரிமைகளை 24,000 சதுர கி.மீ.க்கு பரப்பளவுக்கு மேல் பாதுகாக்கப்பட்டதற்கு குருசோ காரணமாக இருந்தார். மேலும் கொலம்பியாவின் பசிபிக் மழைக்காடுகளை பாதுகாப்பதில் இவர் கவனம் செலுத்தியுள்ளார். லிபியா குரூசோவுக்கு 2004 ஆம் ஆண்டில் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goldman Environmental Prize: Libia Grueso பரணிடப்பட்டது 2007-12-04 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 30, 2007)