ரெட் ரிவர் (1948 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட் ரிவர்
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ஹோவார்டு ஹாக்சு
தயாரிப்புஹோவார்டு ஹாக்சு
மூலக்கதைத சிசோல்ம் டிரைல்
1946 த சாட்டர்டே ஈவனிங் போஸ்ட்
படைத்தவர் பார்டன் சேஸ்
திரைக்கதை
  • பார்டன் சேஸ்
  • சார்லசு சினீ
இசைதிமிற்றி தியோம்கின்
நடிப்பு
ஒளிப்பதிவுருசல் அர்லான்
படத்தொகுப்புகிறித்தியன் நைபை
கலையகம்மாண்டரி புரடக்சன்ஸ்
விநியோகம்யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ்
வெளியீடுஆகத்து 26, 1948[1]
ஓட்டம்133 நிமிடங்கள் (ஆரம்பத்தில்) 127 நிமிடங்கள் (திரையரங்கில்)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
  • ஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$2.7 மில்லியன் (19.3 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$45,06,825 (32,23,10,096.7) (ஐ. அ. மற்றும் கனடா)[3][4]

ரெட் ரிவர் (Red River) என்பது 1948ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இதை ஹோவார்டு ஹாக்சு இயக்கித் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் யோவான் வெயின் மற்றும் மான்டிகோமெரி கிலிப்ட் ஆகியோர் நடித்திருந்தனர். த சிசோல்ம் டிரைல் வழியாக டெக்சஸ் முதல்கேன்சஸ் வரையிலான முதல் கால்நடை ஓட்டுதலை ஒரு புனையப்பட்ட கதையாக இத்திரைப்படம் கூறியது. டெக்சஸ் பண்ணையாளர் வெயின் மற்றும் அவரது தத்தெடுக்கப்பட்ட மகன் கிலிப்ட் இடையிலான பிணக்குகளை இத்திரைப்படம் கூறியது.

வெளியான நேரத்தில், ரெட் ரிவர் திரைப்படமானது வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[5] 1990ல் ரெட் ரிவர் திரைப்படமானது ஐக்கிய அமெரிக்க தேசிய திரைப்படம் பதிவேட்டில் காக்கப்படுவதற்காக அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. "கலாச்சார, வரலாற்று மற்றும் கலைநயமிக்க" படம் எனக் குறிப்பிடப்பட்டது.[6][7] 2008ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் 10 முதல் 10 பட்டியலில் எக்காலத்திலும் சிறந்த ஐந்தாவது மேற்கத்திய திரைப்படமாக ரெட் ரிவர் திரைப்படமானது அமெரிக்க திரைப்பட நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Red River". AFI Catalog of Feature Films. பார்க்கப்பட்ட நாள் May 17, 2018.
  2. Thomas F. Brady. "Hollywood Deals: Prospects Brighten for United Artists – Budget Runs Wild and Other Matters", New York Times 1 Feb 1948, p. X5.
  3. Andreychuk, Ed (1997). The Golden Corral: A Roundup of Magnificent Western Films. McFarland & Company Inc.. பக். 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7864-0393-4. 
  4. Cohn, Lawrence (October 15, 1990). "All Time Film Rental Champs". Variety. p. M-180. ISSN 0042-2738.
  5. Red River (1948) – Awards
  6. "Complete National Film Registry Listing". Library of Congress, Washington, DC. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
  7. Gamarekian, Barbara (1990-10-19). "Library of Congress Adds 25 Titles to National Film Registry" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1990/10/19/movies/library-of-congress-adds-25-titles-to-national-film-registry.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_ரிவர்_(1948_திரைப்படம்)&oldid=3457001" இலிருந்து மீள்விக்கப்பட்டது