ரக்பி (நகரம்)
Appearance
இரக்பி | |
தேவாலயத் தெருவிலிருந்து மேற்கில் காண்கையில் இரக்பி சந்தையிடம் |
|
இரக்பி ஐக்கிய இராச்சியத்தில் | |
மக்கட்தொகை | 70,628 (ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பு 2001) |
---|---|
OS grid reference | SP5075 |
District | இரக்பி |
Shire county | வார்விக்சையர் |
வட்டாரம் | |
நாடு | இங்கிலாந்து |
இறையாண்மையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
அஞ்சல் நகரம் | RUGBY |
அஞ்சல் மாவட்டம் | CV21, CV22, CV23 |
தொலைபேசிக் குறியீடு | 01788 |
காவல்துறை | |
தீயணைப்பு | |
மருத்துவ அவசர ஊர்தி | |
ஐரோப்பிய நாடாளுமன்றம் | |
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் | இரக்பி |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
இரக்பி (Rugby) இங்கிலாந்தின் வார்விக்சையரில் உள்ளதோர் சந்தைப் பட்டினம் ஆகும். ஏவான் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. நகரத்தின் மக்கட்தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70,628 ஆகும்.[1]) இது வார்விக்சையர் கௌன்ட்டியில் இரண்டாவது மக்கட்தொகை மிகுந்த நகரமாகும். இதை அடக்கியுள்ள இரக்பி பரோவின் மக்கட்தொகை 91,600 (2005 மதிப்பீடு).
கவன்ட்ரியிலிருந்து கிழக்கே இரக்பி 13 மைல்கள் (21 கிமீ) தொலைவில் வார்விக்சையரின் கிழக்கு மூலையில் உள்ளது. நார்த்தாம்ப்டன்சையர் மற்றும் லீசெஸ்டர்சையர் கவுன்டிகளின் எல்லைகளின் அண்மையில் உள்ளது.
இரக்பி காற்பந்தின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது.
சுவையான இடங்கள்
[தொகு]நகரத்தில் காணவேண்டிய சில இடங்கள்:
- இரக்பி பாடசாலை அருங்காட்சியகம் - இரக்பி பாடசாலை மற்றும் நகரத்தின் வரலாறு குறித்த ஒலி-ஒளிக் காட்சிகள் உள்ளன.
- இரக்பி கலைக் காட்சியகமும் அருங்காட்சியகமும் - கலைக்கூடத்தில் தேசியளவில் புகழ்பெற்ற தற்கால கலைப்படைப்புக்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தில் மற்றவற்றுடன், அருகிலுள்ள உரோமானிய குடியிருப்பான டிரிபோன்டியத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட உரோம தொல்பொருட்கள் காட்சிப்படுத்துள்ளன.
- ஜேம்சு கில்பர்ட்டு ரக்பி காற்பந்து அருங்காட்சியகத்தில் மரபுப்படியாக ரக்பி பந்துகள் கைகளால் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பல ரக்பி காற்பந்து நினைவுப்பொருட்கள் உள்ளன.