உள்ளடக்கத்துக்குச் செல்

மேலோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறாலின் வரைபடம், மேலோடு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

கேரபேசு அல்லது மேலோடு (Carapace) என்பது பல விலங்குக் குழுக்களில் உள்ள புறவன் கூட்டின் ஒரு பகுதி அல்லது மேலோடு ஆகும் (முதுகுப் பகுதியில் காணப்படும்). கணுக்காலிகளில், ஓடுடைய கணுக்காலி மற்றும் சிலந்தி இனங்கள், முதுகெலும்பிகளில் ஆமைகளில் இவை காணப்படுகின்றன. ஆமைகளின் அடிப்பகுதிகள் பிளாஸ்ட்ரான் என்று அழைக்கப்படுகிறது.

ஓட்டுமீன்கள்

[தொகு]
நியூயார்க்கின் லாங் கடற்கறையில் எடுக்கப்பட்ட பெண் நண்டு உறித்த மேலோடு.

ஓடுடைய கணுக்காலிகளில் மேலோடு தலை மார்பு கண்டத்தினை பாதுகாக்கும் ஒரு மறைப்பாகச் செயல்படுகிறது. இது கண்களைத் தாண்டி முன்னோக்கி குறுகிச் செல்லும். இப்பகுதி தலை கூர்நீட்சி என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு ஓடுடைய கணுக்காலிகளில் கால்சியமானது மேலோடுகளில் பல்வேறு அளவுகளில் படிந்து காணப்படும்.[1]

ஓடுடைய கணுக்காலிகளின் விலங்கு மிதவை நுண்ணுயிரிகளில் மேலோடு உள்ளது. இவற்றில் கிளாடோசெரா, ஆஸ்ட்ராகோடா மற்றும் ஐசோபாட்கள் உள்ளன. ஆனால் ஐசோபாட்களில் மட்டுமே தலையை உள்ளடக்கிய "செபாலிக் கவச" மேலோடு காணப்படுகிறது.

சிலந்தியினங்கள்

[தொகு]
சிலந்தியின் மேலோடு கருஞ்சிவப்பு நிறத்தில்

சிலந்தி இனங்களில் மேலோடு தலைமார்பு பகுதியில் உள்ள வந்தகடுகள் இணைந்து ஒரே தட்டாக உருவாகிறது. இந்த ஒற்றைத் தகட்டில் கண்கள், கண்துளை, வாசனை சுரப்பியின் ஒரு இணை திறப்பு புழை, பல்வேறு உணர்விகள் காணப்படும்.[2]

சோலிபுகே மற்றும் ஸ்கிசோமிடா போன்ற ஒரு சில வரிசையினைச் சார்ந்த சிற்றினங்களில், மேலோடு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஓபிலியோன்களில், சில ஆசிரியர்கள் மேலோடு என்பதை தலைமார்பு என்பதுடன் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றனர். இது தவறான பயன்பாடாகும், ஏனெனில் மேலோடு என்பது தலைமார்பு கண்டத்தின் புறச்சட்டகத்தினை மட்டுமே குறிக்கிறது.

எண்காலிகள் மற்றும் அதன் தொடர்புடைய விலங்குகளில் மேலோடு என்பதற்கு மாற்றுச் சொற்களாக புரோசோமல் முதுகுபுற கவசம் அல்லது பெல்டிடியம் எனப்படுகிறது. இது ஓட்டுமீன்களின் மேலோட்டுடன் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கிறது.

நில மற்றும் கடல் ஆமைகள்

[தொகு]
கிரேக்க ஆமை ஓடு, அடிப்பகுதியிலிருந்து

மேலோடு என்பது ஆமையின் ஓடமைப்பின் முதுகெலும்பின் பின் குவிந்த பகுதியாகும். இது முதன்மையாக விலங்குகளின் விலா எலும்பு கூண்டு, தோல் கவசம் மற்றும் எலும்பு புற தட்டுகளையும் கொண்டுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dean Pentcheff (ed.). "Carapace". Crustacea Glossary. Natural History Museum of Los Angeles County. Archived from the original on 23 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Jan Beccaloni (2009). Arachnids. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-26140-2.
  3. A. S. Romer (1956). Osteology of the Reptiles. University of Chicago Press.
  4. R. Zangerl (1969). Biology of the Reptilia. Academic Press.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலோடு&oldid=3568870" இலிருந்து மீள்விக்கப்பட்டது