மேரி பூனன் உலூகோசு
Appearance
மேரி பூனன் உலூகோசு Mary Poonen Lukose | |
---|---|
பிறப்பு | அய்மணம், கோட்டயம், திருவாங்கூர், பிரித்தானிய இந்தியப் பேரரசு | 2 ஆகத்து 1886
இறப்பு | 2 அக்டோபர் 1976 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா | (அகவை 90)
பணி | மகப்பேறு மருத்துவர், மகப்பேறு அறுவையர் |
அறியப்படுவது | மருத்துவப்பணி |
பெற்றோர் | டி. ஈ. பூனன் |
வாழ்க்கைத் துணை | கே. கே. உலூகோசு |
பிள்ளைகள் | கிரேசி உலூகோசு, கே. பி. உலூகோசு |
விருதுகள் | பத்மசிறீ வைத்யசாத்திரகுசலா (Vaidyasasthrakusala) |
மேரி போனன் உலூகோசு (Mary Poonen Lukose)ஒரு மகப்பேறு மருத்துவரும் அறுவையரும் முதல் இந்தியப் பெண் பொது அறுவையரும் ஆவார்.[1] இவர் நாகர்கோவிலில் என்புருக்கிநோய்த் தணிப்பகத்தையும் திருவனந்தபுரத்தில் X-கதிர், இரேடியம் நிறுவனத்தையும் நிறுவியவரும் ஆவார். இவர் திருவாங்கூர் அரசர் சமத்தானத்தில் உடல்நலத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் திருவாங்கூர் அரசின் முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினரும் ஆவார்.[1] இந்திய அரசு இவருக்கு 1975 இல் நான்காம் இந்திய உயர்க்குடிமை விருதாகிய பத்மசிறீ விருதை வழங்கி மதிப்பளித்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mary Poonen Lukose (1886-1976)". Stree Shakti. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
மேலும் படிக்க
[தொகு]- Nair, K. Rajasekharan (July 2002). "A Pioneer Medicine-Dr. Mary Poonen Lukose (1886-1976)". Samyukta - A Journal of Women's Studies II (2): 117-121.