மேகலபாளையம்
மேகலபாளையம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | இராமநகரம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 180 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562127 |
அருகில் உள்ள நகரம் | பெங்களூர் |
மக்களவைத் தொகுதி | பெங்களூர் ஊரகம் |
சட்டமன்றத் தொகுதி | மாகடி |
மேகலபளையம் (Megalapalya) என்பது இந்திய மாநிலமான, கருநாடகத்தின், இராமநகர மாவட்டத்தின் மாகடி வட்டத்தி உள்ள ஒரு சிற்றூர் ஆகும். (2010 இக்கு முன்பு இது பெங்களூர் ஊரக மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது). இந்தச் சிற்றூரில் 50 வீடுகள் மட்டுமே உள்ளன. ஊரில் வொக்கலிகர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த ஊர் பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.48) பெங்களூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக பாலேகம்மா தேவி அம்மன் உள்ளார். இந்திய ஆட்சிப்பணி அலுவலரான டாக்டர். எம். வி. வெங்கடேஷ் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர். அரசியல்வாதியும் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவியான டாக்டர் பி. வி. அம்சகுமாரி இந்த கிராமத்தின் மருமகளாவார்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது இராமநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், மாகடியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூர் நகரில் இருந்து 477 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தில் 312 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1225 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 630 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 595 என்றும் உள்ளது. மேகலபளையத்தின் பரப்பளவு 449 எக்டேர் ஆகும்.[1]