உள்ளடக்கத்துக்குச் செல்

முழுமிதவைவாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதவைவாழிகள் இருவகைப்படுகின்றன. ஒன்று தன் வாழ்நாளில் பகுதியை மட்டும் மிதவைவாழிகளாகவும் மற்றொன்று வாழ்நாள் முழுதும் அல்லது நிரந்தரமான மிதவைவாழிகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு வாழ்வையே மிதவைவாழிகளாய்க் கழிப்பவனவற்றை நாம் முழுமிதவைவாழிகள் என விளிக்கிறோம்.

அலைதாவரங்களில் பெரும்பாலனவைகள் முழுமிதவைவாழிகளாய்த் திகழ்கின்றன. ஏனெனில் இவைகளின் வளர்ச்சிக்கு சூரிய ஓளி இன்றியமையாததாய் இருக்கிறது. இவைகளே உணவுப்பிரமிடுகளில் அடிப்படை உணவு உற்பத்தியாளர்கள். இவைகளை பெரும்பான்மையான மீன்கள், அலைவிலங்குகள் இறையாக எடுத்துக்கொள்கின்றன. அவைகளில் குறிப்பிடும்படியாக இருக்கலப்பாசி, பச்சைப்பாசி எனப்பல. ஆனால், அலைவிலங்குகளில் அனைத்தும் முழுமிதவைவாழிகளாய்த் திகழ்வதில்லை. இவை பகுதியை நீர்பரப்புகளிலும் பகுதியை நீர்மட்டத்திலும் கழிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு வாழ்நாளையே மிதவைவாழிகளாய் கழிக்கும் அலைவிலங்குகள் - கடல் நத்தைகள், இலைநத்தைகள், உருளைப்பசையுயிர்கள் (Salps), கூனிப்பொடிகள் (krill), சொறிமுட்டைகள் மற்றும் சிலக் கடல்புழுக்கள் [1].

முக்கிய குறிப்புகள்

[தொகு]
  • மிதவைவாழிகளில் நிரந்தரமாக கடற்மேற்பரப்புகளில் கழிப்பவனவை நாம் முழுமிதவைவாழிகள் என்கிறோம்.
  • மிதவைவாழிகளில் குறிப்பிடத்தக்கவனவாக,
இருக்கலப்பாசி, ஈர்கசைவாழி, மூத்தவிலங்கிகள் (ரேடியோலேரியன்கள்), போரமினப்போரக்கள், ஆம்பிபோடுகள், கூனிப்பொடிகள், நத்தைகள் மற்றும் சொறிமுட்டைகள் ஆகியன.
சக்கரவிலங்குகளில் (Rotifers) பெரும்பான்மையானவை நகரா உயிரினங்களாகவே உள்ளன. அவைகளில் 100க்கும் அதிகமான இனங்கள் முழுமிதவைவாழிகளாய்த் திகழ்கின்றன.
கீட்டோநாத்துகள்/அம்புப்புழுக்கள் (Chaetognath/arrow worm), டீரோப்போடுகள் (Pteropod), குழல்பசையுடலிகள் (Siphonophores), லார்வேசியன்கள் மற்றும் கோப்பிபோடு இனங்கள் பெரும்பாலும் முழுமிதவைவாழிகளாய் உள்ளன [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-07. பார்க்கப்பட்ட நாள் 2011-05-26.
  2. http://marinebio.org/oceans/zooplankton.asp

காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுமிதவைவாழி&oldid=3568207" இலிருந்து மீள்விக்கப்பட்டது