உள்ளடக்கத்துக்குச் செல்

மும்பை தொலைக்காட்சி கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை தொலைக்காட்சி கோபுரம் வோர்லியின் வான்வெளியில்.

மும்பை தொலைக்காட்சி கோபுரம் ( Mumbai Television Tower) மும்பை, இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனால் நிர்வகிக்கப்படும் தொலைக்காட்சி கோபுரமாகும். இதன் உயரம் 300 மீட்டர் (985 அடி). மேலும் இது இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும்.[1] [2] சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய இந்த கோபுரம் திறந்த இரும்பு சட்டகங்களால் ஆனது. இந்த கோபுரம் வோர்லியில் அமைந்துள்ளது. இக்கோபுரத்தை தென் மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் காணலாம்.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]