மீனாட்சி பானர்ஜி
மீனாட்சி பானர்ஜி Meenakshi Banerjee | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணியிடங்கள் | பரக்கத்துல்லா பல்கலைக்கழகம், போபால் |
கல்வி கற்ற இடங்கள் | மகளிர் கல்லூரி, பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நீலப்பச்சைப்பாசி |
விருதுகள் | Dமுனை கட்ஜூ விருது மத்தியப் பிரதேச இளம் அறிவியலாளர் விருது |
மீனாட்சி பானர்ஜி (Meenakshi Banerjee) என்பர் ஓர் இந்திய நீலப்பச்சைப்பாசியில் ஆய்வு மேற்கொண்ட அறிவியலாளர் ஆவார். இவர் டெக்சாசுன் ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு அல்கா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆவார். இவர் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் முன்னாள் தலைவர் ஆவார்.
கல்வி
[தொகு]பானர்ஜி தனது பள்ளிப்படிப்பை ஆசான்சோலில் உள்ள ஐரிஷ் கன்னிமாடப் பள்ளியில் முடித்தார். பின்னர் ராஞ்சி பல்கலைக்கழகத்தின் நிர்மலா கல்லூரியில் அறிவியல் பயின்றார். இவர் இளநிலை தாவரவியல் பயில பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்த பாடத்தில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தாவரவியலில் முதுநிலைப் பட்டம் பயில வழிவகுத்தது. இக்கல்வியின் போது நீலப்பச்சைபாசியில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
பணி
[தொகு]பானர்ஜி 1989-ல் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவர் 1997-ல் இணைப்பேராசிரியராகவும், 2005-ல் பேராசிரியராகவும் ஆனார். பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையின் தலைவராகச் செயல்பட்டார்.[1]
விருது
[தொகு]பானர்ஜி 2010ஆம் ஆண்டிற்கான முனைவர் கே. என். கட்ஜு மாநில அளவிலான அறிவியல் விருதைப் பெற்றார்.[2] பானர்ஜி தேசிய அறிவியல் அகாதமியின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.
ஆய்வு
[தொகு]இவரது தற்போதைய ஆய்வுகள் பாசி உயிர் உரங்களில் அரிய வகை மருத்துவத் தாவரங்களைப் பரப்புவதற்கான ஆராய்ச்சி ஆகும். வாழ்வின் எல்லையில் வாழும் குளிர் மற்றும் வெப்பமான பாலைவனங்கள் உட்பட பல்வேறு வாழ்விடங்களிலிருந்து நீலப்பச்சைப்பாசி குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.[1] கழிவுநீரைச் சுத்திகரிக்கவும் உயிரி எரிபொருளை உருவாக்கவும் பாசிகளைப் பயன்படுத்துவது குறித்து இவர் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Barkatullah University Profile" (PDF). Archived from the original (PDF) on 23 January 2013. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
- ↑ "Madhya Pradesh government announces names of science awardees". பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
- ↑ "Biofuels From Algae In Wastewater". பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.