உள்ளடக்கத்துக்குச் செல்

மிருணாளினி சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிருணாளினி சென் அல்லது மிருணாளினி தேவி (3 ஆகத்து 1879 - 8 மார்ச்சு 1972) ஒரு வங்காள மொழி பெண் கவிஞர், இவர் முதன் முதலில் விமானத்தில் பறந்த முதல் இந்தியப் பெண் ஆவார்.[1][2]

வாழ்க்கை

[தொகு]

மிருணாளினி தேவி பீகார் மாநிலத்திலுள்ள பாகல்பூரில் லுத்தி குடும்பத்தில் பிறந்தார். தனது 12 வது வயதில் வங்காளத்தின் மிகப்பழமையான மாகாணமான பைக்பாராவின் மன்னரைத் திருமணம் செய்துகொண்டார். பைக்பாராவின் மன்னர் தனது 27 வது வயதில் இறந்த பின்பு மிருணாளினி தேவி, நிர்மல் சந்திர சென் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் இருவரும் 1910 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி முதன் முறையாக விமானத்தில் பறந்தனர். இந்த நிகழ்வை அப்போதைய பிரஞ்சு, ஆங்கிலப் பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் குறிப்பிட்டுள்ளன.[1][2]

கணவரின் பணி நிமித்தம் காரணமாக இங்கிலாந்து சென்று சில காலம் வசித்த பின் இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன்னர் கணவருடன் இந்தியா திரும்பி கல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினர். இந்தக் காலக்கட்டத்தில் வங்காள மொழியில் பல கவிதைகளை எழுதினார். அவை தேஷ் என்ற பத்திரிக்கையில் வெளிவந்தன.[3]

எழுத்துப்பணி

[தொகு]

1954ஆம் ஆண்டு மிருணாளினி தேவி தனது சுயசரிதை நூலை எழுதியுள்ளார் அதில் "தான் எவ்வாறு முதல் விமானத்தில் பறந்த முதல் பெண் ஆனேன்" என்பதை விளக்கியுள்ளார். 'Knocking the Door" என்ற 708 பக்கங்கள் அடங்கிய புத்தகத்தை 1954-இல் வெளியிட்டார். 8 மார்ச்சு 1972 இல் அவர் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "One December over a century ago, a woman became first Indian to fly in country | Mumbai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Dec 23, 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  2. 2.0 2.1 Johari, Aarefa. "Finding Mrs Sen: The first Indian woman to fly in a plane was a poet called Mrinalini Devi". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  3. https://scroll.in/magazine/907444/finding-mrs-sen-the-first-indian-woman-to-fly-in-a-plane-was-a-poet-called-mrinalini-devi
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருணாளினி_சென்&oldid=3497358" இலிருந்து மீள்விக்கப்பட்டது