உள்ளடக்கத்துக்குச் செல்

மின் தானுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெஸ்லா ரோட்ஸ்டர், 2008 இல் வெளியிடப்படும் இவற்றின் முதல் 650 தானுந்துகள் லித்தியம்-அயன் மின்கலங்களைப் பாவித்து 220 மைல்கள் செல்லக்கூடியன.

மின் தானுந்து (Electric car) என்பது எரிபொருளுக்கு பதிலாக மின் ஆற்றலைப் பயன்படுத்தும் தானுந்து ஆகும். மின்கலத்தில் ஆற்றல் சேமிக்கப்பட்டு மின்னோடி கொண்டு அதை இயக்க ஆற்றலாக மாற்றி மின் தானுந்து பயன்படுத்துகின்றது. இவற்றை நிர்வகிக்க இலத்திரனியல் கட்டுப்பாட்டு தொகுதியும் உண்டு. இதில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் மீண்டும் மின்னேற்றம் செய்யப்படக்கூடிவை.

தற்போதைய சூழலில் மின் தானுந்துகள் விலை அதிகமானவை. ஆனால் எரி பொருள் விலை அதிகரிப்பு, சூழல் மாசடைதல் பிரச்சினை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய காரணங்கள் எதிர்காலத்தில் கூடிய மின் தானுந்து பயன்பாட்டை ஏதுவாக்கும். மின் தானுந்து எரிபொருள் தானுந்து போல மாசடைந்த புகையை வெளியேற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Electrically-powered automobiles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reducing Pollution with Electric Vehicles". www.energy.gov (in ஆங்கிலம்). Archived from the original on 12 May 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-05-12.
  2. US EPA, OAR (2021-05-14). "Electric Vehicle Myths". www.epa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-09.
  3. "How to charge an electric car" (in en). Carbuyer இம் மூலத்தில் இருந்து 23 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180423102022/http://www.carbuyer.co.uk/tips-and-advice/155186/how-to-charge-an-electric-car. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_தானுந்து&oldid=4101883" இலிருந்து மீள்விக்கப்பட்டது