உள்ளடக்கத்துக்குச் செல்

மிதிவண்டி பம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கையில் இயக்கப்படும் மிதிவண்டி பம்பு
காலில் இயக்கப்படும் பைக் பம்பு
சடத்தில் பொருத்தப்பட்ட பைக் பம்பு
மிதிவண்டிகளுக்காக அமைக்கபட்ட பொது பயன்பாட்டு காற்று அமுக்கி.

மிதிவண்டி பம்பு என்பது மிதிவண்டி வட்டகைகளில் காற்றடிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு வகை விசையியக்கக் குழாய் காற்று பம்பு ஆகும். மிதிவண்டிகளில் பயன்படுத்தப்படும் ஷ்ராடர் அல்லது பிரஸ்டா என்ற பொதுவான இரண்டு வகை அடைப்பிதழ்களில் (வால்வு) பயன்படுத்த இது ஒரு இணைப்பைக் கொண்டுள்ளது. டன்லப் (அல்லது வூட்ஸ்) அடைப்பிதழ் எனப்படும் மூன்றாவது வகை அடைப்பிதழ் உள்ளது, ஆனால் இந்த அடைப்பிதழ்களுடன் கூடிய குழாய்களை பிரஸ்டா பம்பைப் பயன்படுத்தி நிரப்ப முடியும். [1]

பொதுவாக மிதிவண்டி பம்பானது கையால் அழுத்தப்படும் உந்துத் தண்டால் (பிஸ்டன்) செயல்படுகிறது. இது முன்னும் பின்னுமாகவும் இயங்கும். இதனுள் இருக்கும் உந்துத் தண்டு அடைப்பிதழ் (வால்வு) வெளிக்காற்றை உள்ளே புக விடும். ஆனால் குழாயுனுள் சென்ற காற்றை வெளியே செல்ல விடாது. பஉந்துத் தண்டில் உள்ள அடைப்பிதழ் போன்றே குழாயின் அடியிலும் ஒரு அடைப்பிதழ் இருக்கும். அது குழாயில் உள்ள காற்றை எதனுள் செலுத்துகிறோமோ அதனுள் புகவிடும். ஆனால் அதே காற்றை மீண்டும் வந்த வழியே வெளிச்செல்ல விடாது. அடிப்பாகத்தின் மூலம் காற்றைச் செலுத்தி விட்டு மீண்டும் உந்துத் தண்டை மேலே தூக்கினால் காற்றுக் குறைந்த குழாயின் உட்பகுதியை நோக்கி வெளிக்காற்று அடைப்பிதழின் வழியே உட் சென்று நிரம்பும். மீண்டும் உந்துத் தண்டை கீழ் நோக்கி அழுத்தினால் குழாயில் உள்ள காற்று கீழேயுள்ள அடைப்பிதழைத் திறந்துகொண்டு எதனுள் காற்றைச் செலுத்துகிறோமோ அதனுள் சென்று நிரம்பும். காலில் அழுத்தும் காற்றழுத்தி பம்புகளில், வட்டகையில் காற்றழுத்தத்தைக் குறிக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட அழுத்த மானியைக் கொண்டுள்ளன.

மகிழுந்து வட்டகைகளில் காற்றடிக்க மின்சாரம் மூலம் இயக்கப்படும் விசையியக்கக் குழாய்களில் சரியான வகை இணைப்பு கிடைத்தால் மிதிவண்டி வட்டகையிலும் காற்றடிக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சில பம்புகள் போதுமான அழுத்தம் ஏற்பட்டவுடன் துண்டிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன (மிதிவண்டி வட்டகைகளில் அடைக்கபடும் காற்றைவிட மகிழுந்து வட்டகைகளில் காற்றழுத்தம் மிக அதிகம்). அதிகப்படியான காறடித்தால் மிதிவண்டி வட்டகை குழாய் வெடிக்கும் அபாயம் உள்ளது.

வரலாறு

[தொகு]

மிதிவண்டி பம்பு முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் இது 1887 அல்லது அதை வட்டிய காலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. ஸ்காட்லாந்தின் ஜான் பாய்ட் டன்லொப் என்பவரால் முதல் காற்றடைக்கபட்ட வட்டகை தயாரிக்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிவண்டி_பம்பு&oldid=3052685" இலிருந்து மீள்விக்கப்பட்டது