மாஸ்கோ முற்றுகை (1238)
மாஸ்கோ முற்றுகை (1238) | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் கீவ ருஸ் மீதான படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||
விளாதிமிரின் மதில் சுவர்களுக்கு வெளியே மங்கோலியர்கள். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மங்கோலியப் பேரரசு | விளதிமிர்-சுஸ்டால் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
படு கான் | வோயிவோடு பிலிப் நியாங்கா † இளவரசர் விளாதிமிர் ஊரியேவிச்சு (கைதி) |
||||||
பலம் | |||||||
குறைந்தது ஒரு தியூமன் நாடோடிக் குதிரைப்படை வீரர்கள் | சில நூறு படைத்துறை சாராப் படை | ||||||
இழப்புகள் | |||||||
மிதம் | அதிகம்
|
மாஸ்கோ முற்றுகை (Siege of Moscow (1238)) என்பது 1238ஆம் ஆண்டு நடந்த ஒரு முற்றுகைப் போராகும். இது மங்கோலியர்களின் கீவ ருஸ் மீதான படையெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
பின்புலம்
[தொகு]திசம்பர் 21, 1237ஆம் ஆண்டு ரியாசானின் அழிவிற்குப்பிறகு மாட்சிமிக்க இளவரசரான இரண்டாம் ஊரி தனது மகன்கள் விசேவோலோடு மற்றும் விளாதிமிரைப் பெரும்பாலான விளாதிமிர்-சுஸ்டாலின் இராணுவத்துடன் சேர்த்து மங்கோலியப் படையெடுப்பாளர்களை கோலோம்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்த அனுப்பினார். இங்கு, உருசிய இராணுவமானது தோற்கடிக்கப்பட்டது. தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிதறி வடக்கு நோக்கி ஓட ஆரம்பித்தனர். அவர்கள் விளாதிமிர் மற்றும் மாஸ்கோவை அடைந்தனர்.
முற்றுகை
[தொகு]சனவரி 1238இல் கோலோம்னாவின் அழிவிற்குப் பிறகு விளாதிமிரின் இரண்டாம் ஊரியின் இளைய மகனான இளவரசர் விளாதிமிர் மாஸ்கோவுக்குத் தன்னுடைய எஞ்சிய சிறிய படையுடன் தப்பி ஓடினார்.[1] நோவ்கோரோடு வரலாற்று நூலில், "மாஸ்கோவின் வீரர்கள் எதையும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு ஓடி தப்பினர்"[2] என்று இதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நேரத்தில் மாஸ்கோவானது அரண்களைக் கொண்ட ஒரு கிராமமாக இருந்தது. "நான்கு ஆறுகள் சந்தித்த இடத்தில்" ஒரு வணிக பணியிடமாகத் திகழ்ந்தது. [3]ஐந்து நாட்கள் முற்றுகைக்குப் பிறகு மாஸ்கோவின் சிறிய மரக் கோட்டையானது கைப்பற்றப்பட்டது.
பிறகு
[தொகு]இளவரசர் விளாதிமிர் பிடிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விளாதிமிர் தற்காப்பாளர்களின் கண் முன்னால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[4]
உசாத்துணை
[தொகு]- ↑ "Никифоровская летопись. Никифорівський літопис. Том 35. Литовсько-білоруські літописи". litopys.org.ua. பார்க்கப்பட்ட நாள் 2018-02-25.
- ↑ Michell, Robert; Shakhmaton, A. A.; Forbes, Nevill; Beazley, C. Raymond (Charles Raymond) (1914). The chronicle of Novgorod, 1016-1471. University of California Libraries. London, Offices of the society.
- ↑ Grigorjevič., Jan, Vasilij (1991). Batu-kan : istorijski roman. Lobačev, Đorđe., BIGZ). Beograd: Prosveta. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8607005944. இணையக் கணினி நூலக மைய எண் 438360055.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Новгородская летопись". krotov.info. பார்க்கப்பட்ட நாள் 2018-02-25.