உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாற்றுக் கல்லீரல் பொருத்துதல்
இடையீடு
மனிதக் கல்லீரல்
MeSHD016031

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் (Liver transplantation அல்லது hepatic transplantation) என்பது நோயுற்ற கல்லீரல் ஒன்றை மரபணு பகிராத அதே இனத்தைச் சேர்ந்த கொடையாளியின் ஆரோக்கியமான கல்லீரல் ஒன்றினால் மாற்றிப் பொருத்தும் தன்னின ஒட்டு அறுவை சிகிட்சை முறையாகும். நோயுற்ற கல்லீரல் நீக்கப்பட்டு அதே இடத்தில் கொடையாளியின் உறுப்புப் பொருத்தப்படும் இயற்கையிட ஒட்டே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் செய்முறை ஆகும். மாற்றுக் கல்லீரல் சிகிட்சை இறுதிநிலை கல்லீரல் நோய்க்கும் கடிய செயலிழந்த கல்லீரலுக்கும் தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் சிகிட்சை முறையாகும். இது நவீன மருத்துவத்தில் மிகவும் விலையுயர்ந்த சிகிட்சையாகவும் உள்ளது. பொதுவாக மூன்று அறுவைசிகிட்சை மருத்துவர்களும் ஒரு மயக்கவியல் மருத்துவரும் நான்கு செவிலியரும் நான்கு முதல் 18 மணி நேரம் வரை ஈடுபடும் ஓர் சிக்கலான அறுவை சிகிட்சையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]