மாறுபடும் விண்மீன்
Appearance
மாறுபடும் விண்மீன் (ஆங்கில மொழி: variable star) என்பது புவியிலிருந்து காணும் போது காலத்திற்கேற்ப தோற்றப் பருமன் அல்லது தோற்றப் பொலிவு (apparent magnitude) மாறுபடும் விண்மீனைக் குறிக்கும். தோற்றப் பொலிவு மாறுபாடு அதன் ஒளிர்வில் ஏற்படும் மாற்றத்தினாலோ அல்லது புவியின் வளிமண்டலத்தினால் ஏற்படும் நிகழ்வாகவோ இருக்கலாம். பெரும்பாலான விண்மீன்களின் பொலிவு மாறுபடக் கூடியதே. எடுத்துக்காட்டாக பகல்வானில் காணும் மிகப் பொலிவுள்ள விண்மீனான நமது சூரியனின் பொலிவு கூட ஒரு 11 ஆண்டு சூரிய சுழற்சியில் 0.1 விழுக்காடு மாறுபடுகிறது.[1]
2008ம் ஆண்டின் மாறுபடும் விண்மீன்களின் பொது அட்டவணைப்படி[2] பால்வழி மண்டலத்தில் 46,000 மாறுபடும் விண்மீன்கள் உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ Solar Constant, PMOD/WRC, பார்க்கப்பட்ட நாள் 2009-04-27
- ↑ "General Catalogue of Variable Stars: Vols I-III (the new electronic version)". Sai.msu.su. பார்க்கப்பட்ட நாள் 2013-07-01.