பால் வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பால்வழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால் வழி விண்மீன்பேரடை
Milky Way IR Spitzer.jpg
பால் வழியின் மையப்பகுதியின் அகச்சிவப்புப் படம்.
நோக்குத் தரவு
வகை SBbc (சட்டச் சுருளி விண்மீன்பேரடை)
விட்டம் 100,000 ஒளியாண்டுகள்
தடிப்பு 1,000 ஒளியாண்டுகள் (விண்மீன்கள்)
விண்மீன்கள் எண்ணிக்கை 200 to 400 பில்லியன்
அறியப்பட்ட மிகப் பழைய விண்மீன் 13.2 பில்லியன் ஆண்டுகள்[1]
Mass 5.8×1011 M
விண்மீன்பேரடை மையத்தில் இருந்து சூரியனின் தூரம் 26,000 ± 1,400 ஒளியாண்டுகள்
சூரியனின் விண்மீன்பேரடைச் சுற்றுக்காலம் 220 மில்லியன் ஆண்டுகள் (எதிர்மறைச் சுற்று)
சுருளி வடிவச் சுற்றுக்காலம் 50 மில்லியன் ஆண்டுகள்[2]
Bar pattern rotation period 15 to 18 million years[2]
Speed relative to CMB rest frame 552 km/s[3]
See also: விண்மீன் பேரடை, List of galaxies

பால் வழி (Milky Way) என்பது நமது சூரியக் குடும்பத்தைக் கொண்டுள்ள ஒரு விண்மீன்பேரடை (galaxy) ஆகும். இதன் நடுவே சட்ட வடிவிலான விண்மீன்களாலான அமைப்புக் காணப்படுவதால் இதனை ஒரு சட்டச் சுருளி விண்மீன்பேரடை (barred spiral galaxy) என்று கூறுவர். அண்டவெளியில் பல கோடிக்கணக்கான விண்மீன் பேரடைகள் உள்ளன. எனினும், மனிதர் வாழும் புவியை ஒரு பகுதியாகக் கொண்ட சூரியத்தொகுதி பால் வழி என்னும் இந்த நாள்மீன் பேரடையில் இருப்பதால் மனிதருக்கு இதன் மீது சிறப்பு அக்கறை உண்டு. புவியிலிருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் ஒளி பொருந்திய ஒரு பட்டையாக பால் வழியின் தளத்தைப் பார்க்க முடியும். இவ்வாறு வெண்ணிறப் பட்டையாகத் தெரிவதனாலேயே இதற்குப் பால்வழி என்னும் பெயர் ஏற்பட்டது.

எனினும் சிலர் பால் வழி என்னும் இப் பெயர் ஒளி பொருந்திய இப் பட்டைத் தோற்றத்தை மட்டுமே குறிக்கவேண்டும் எனவும், இதனோடு தொடர்புள்ள விண்மீன்பேரடையைக் குறிக்கும்போது முழுமையாகப் பால் வழி விண்மீன்பேரடை என்று முழுமையாகக் குறிக்கவேண்டும் என்றும் கூறுவர்.

தோற்றமும் அமைப்பும்[தொகு]

பால் வழி இரவு நேரத்தில் பால்வழியின் நடுவில் இருக்கும் வெள்ளொளி பகுதியில் இருந்து 30 டிகிரி செங்குத்துச் சாய்வாகத் தெரியும். இந்த வெள்ளொளி விண்மீன் படிமலர்ச்சியில் முழுமை அடையாத விண்மீன்களால் உருவாக்கப்படுகிறது. அதே நேரம் பால்வழியில் உள்ள தூசிகளால் சில பகுதிகள் இருள் சூழ்ந்தும் காட்சியளிக்கும். மானிடர் வாழும் புவி இருக்கும் இடம் ஓரியன் கையின் ஓரத்தில் உள்ளதால் பால் வழியின் வெள்ளொளிப் பகுதியின் சாய்கோனத்தை மானிடர் கண்களாலேயே இரவில் பார்க்க முடிகிறது.

பால்வழியின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் (முப்பதாயிரம் புடைநொடிகள்) அளவுடையது. இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் (முன்னூறு புடைநொடிகள்) ஆகும். இந்த பால் வழி நாள்மீன் பேரடையில் பத்தாயிரம் கோடிகயில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

பால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே சூரிய மண்டலம் இருக்கிறது.

பால்வழியின் சுருள்கைகள்
நிறம் கை(கள்)
சியான் பெர்சியசு சுருள்கை
பர்புள் சுருள்கையும் வெளிச்சுருள்கையும்
பச்சை சுகட்டம் சென்டாரசு சுருள்கை
இளம் ரோஜா கரினா சஜிடேரியசு சுருள்கை
இரண்டு துரும்புச் சுருள்கைகள்
இளஞ்சிவப்பு ஓரியன் கை

சூரியனும் பால்வழியும்[தொகு]

பால் வழி மண்டலத்தில் காணப்படும் ஓரியன் கை

ஓரியன் கை பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும். அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும். சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.

பால் வழியின் எதிர்காலம்[தொகு]

பால் வழியும் அந்திரொமேடா பேரடையும் இரட்டைப் பேரடைகளாகும். இவற்றையும் சேர்த்து ஐம்பது விண்மீன் பேரடைகள் கன்னி விண்மீன் மீகொத்தின் உட் குழுவில் உள்ளது.

மூலக்கட்டுரை - அண்டிரோமடா-பால்வழி மோதல்

பால் வழியும் அந்திரொமேடா பேரடையும் 300 கோடி ஆண்டுகளுக்கு பிறகு மோதிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (1012) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x1011) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x107 சூரிய விட்ட (4x1013 கிமீ அல்லது 4.2 ஒஆ) தூரத்தில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x1011 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.

பால் வழிப் பேரடையின் வயது[தொகு]

பால்வழியில் உள்ள விண்மீன்களின் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 போன்ற அனுக்களை ஒப்பிட்டு அணுவண்ட காலக்கணிப்பின் மூலம் விண்மீனின் வயதைக் கணிப்பர். ஒரு விண்மீன் வெண் குறுமீன் ஆனவுடன் அம்மீன் மெதுவாக குளிர்வடையும். அதன் அதிக குளிர்நிலைக்கும் அதன் ஆரம்ப குளிர்நிலைக்கும் (விண்மீனிலிருந்து குறுமீன் ஆன போது) உள்ள வேறுபாட்டைக் கொண்டு பால்வழியின் வயதைக் கணித்தனர். அதன்படி பால்வழியின் பழம்பகுதியான எம் 4 உருண்டை விண்மேகத்தின் வயது குறைந்தளவு 1270 ± 70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 95% பால்வழியின் வயது 1600 கோடி ஆண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு.

மூல நூல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frebel, Anna; Christlieb, Norbert; Norris, John E.; Thom, Christopher; Beers, Timothy C.; Rhee, Jaehyon (2007). "Discovery of HE 1523-0901, a Strongly r-Process-enhanced Metal-poor Star with Detected Uranium". The Astrophysical Journal 660 (2): L117. doi:10.1086/518122. Bibcode: 2007ApJ...660L.117F. 
  2. 2.0 2.1 Bissantz, Nicolai (2003). "Gas dynamics in the Milky Way: second pattern speed and large-scale morphology". Monthly Notices of the Royal Astronomical Society 340: 949. doi:10.1046/j.1365-8711.2003.06358.x. arXiv:astro-ph/0212516. 
  3. Kogut, A.; Lineweaver, C.; Smoot, G. F.; Bennett, C. L.; Banday, A.; Boggess, N. W.; Cheng, E. S.; de Amici, G.; Fixsen, D. J.; Hinshaw, G.; Jackson, P. D.; Janssen, M.; Keegstra, P.; Loewenstein, K.; Lubin, P.; Mather, J. C.; Tenorio, L.; Weiss, R.; Wilkinson, D. T.; Wright, E. L. (1993). "Dipole Anisotropy in the COBE Differential Microwave Radiometers First-Year Sky Maps". Astrophysical Journal 419: 1. doi:10.1086/173453. http://adsabs.harvard.edu/cgi-bin/nph-bib_query?bibcode=1993ApJ...419....1K. பார்த்த நாள்: 2007-05-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_வழி&oldid=1996339" இருந்து மீள்விக்கப்பட்டது