உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கரிட்டாசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரிட்டாசைட்டு
Margaritasite
பொதுவானாவை
வகைகார்னோடைட்டு குழு
வேதி வாய்பாடு(Cs, K, H3O)2(UO2)2V2O8·H2O
இனங்காணல்
நிறம்மஞ்சள்
படிக இயல்புபடிகங்கள், குறிப்பாகத் திரள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி5.41
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
α = [< 1.83] (செயற்கை). β = 2.49(1) γ = > 2.7
2V கோணம்45.5◦
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2][3]

மார்கரிட்டாசைட்டு (Margaritasite) என்பது Cs, K, H3O)2(UO2)2V2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சீசியத்தைக் கொண்டுள்ள இக்கனிமம் கார்னோடைட்டு குழுவைச் சேர்ந்த ஒரு கனிமமாகும். மார்கரிட்டாசைட்டு கனிமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. P21/a என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு கட்டமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மார்கரிட்டாசைட்டு கனிமத்தை Mgt[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

வரலாறு

[தொகு]

1982 ஆம் ஆண்டு முதன்முதலில் மெக்சிகன் மாநிலமான சிகூவாகூவாவில் உள்ள அல்டாமா நகராட்சியின் பெனா பிளாங்கா மாவட்டத்தில் உள்ள மார்கரிடாசு யுரேனியம் படிவுகளில் மார்கரிட்டாசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mindat.org - Margaritasite
  2. 2.0 2.1 Appleman, D.E.; Evans, H.T. (1965). "The crystal structures of synthetic anhydrous carnotite, K2(UO2)2V2O8, and its cesium analogue, Cs2(UO2)2V2O8". American Mineralogist 50: 825–842. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/50/7-8/825/540140. பார்த்த நாள்: 30 December 2020. 
  3. "Handbook of Mineralogy - மார்கரிட்டாசைட்டு" (PDF). Archived from the original (PDF) on 2012-10-01. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரிட்டாசைட்டு&oldid=4171038" இலிருந்து மீள்விக்கப்பட்டது