மன்சப்தார்
Appearance
மன்சப்தாரி முறை அக்பர் போன்ற முகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் இருந்த படைத் தலைவர்களின் தகுதியை குறிக்கும் முறையாகும்.
மன்சப்தாரி முறையில் படைத்தலைவர்களுக்கு ஒரு தகுதிநிலை வழங்கப்பட்டது. குறைந்ததபட்ச தகுதிநிலை 10 குதிரைப்படை வீரர்களைக் கொண்ட மன்சப்தார் ஆவார். அதிகபட்சம் 5000 குதிரைப்படை வீர்ர்கள் கொண்ட மன்சப்தார் ஆவார். மன்சப்தார் பதவி உயர் குடியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மன்சப் தகுதிநிலைக்கு வாரிசுரிமை கிடையாது. நியமனங்கள் பதவி உயர்வுகள், பதவி நீக்கங்கள் முகலாயப் பேரரசரால் மட்டுமே அறிவிக்கப்படும். [1]மன்சப்தாரி முறையில், படைத்தலைவர்களுக்கு போர்ப்படைகளை பராமரிக்க ஆண்டுதோறும் முகலாயப் பேரரசிடமிருந்து நிதியுதவி கிடைக்கும்.