மதுரா (மொழி)
மதுரா | |
---|---|
மதுரா, பாசா மதுரா | |
பிராந்தியம் | மதுரா, சப்பூடி தீவு, கீழைச் சாவகத்தின் வடகரைப் பகுதிகள், சிங்கப்பூர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (14 மில்லியன் காட்டடப்பட்டது: 1995) |
அவுசுத்திரோனேசியம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | mad |
ISO 639-3 | mad |
மதுரா என்பது இந்தோனேசியாவின் கிழக்கு சாவகத்தில் மதுரா மக்களாற் பேசப்படும் மொழியாகும். இது மதுரா தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள காங்கேயன் தீவுகள், சப்பூடி தீவுகள் என்பவற்றிலும் பசாருவான், சுராபாயா, மலாங், பஞுவாஙி, மசாலெம்பு தீவுகள் என்பவற்றிலும் கலிமந்தானின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. காங்கேயன் வழக்கு தனி மொழியாகவும் வகைப்படுத்தப்படுகிறது. மதுரா மொழி பண்டைக் காலம் முதலே சாவக எழுத்துக்களிலேயே எழுதப்பட்டு வந்துள்ளது. இப்போது இலத்தீன் எழுத்துக்களில் எழுதும் பழக்கமும் பொதுவாக இருக்கிறது. மதுரா மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டு வந்த போதிலும், 8-13 மில்லியன் பேர் இம்மொழியைப் பேசுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலி–சசாஃ மொழிகள் என்பவற்றுக்கும் மதுரா மொழிக்கும் இடையிலான தொடர்பு, இம்மொழிகளிலான பேச்சு வழக்கு இவற்றுக்குப் பொதுவானதாகவே பெரும்பாலும் காணப்படுகிறது. அவ்வாறே, மதுரா மொழிக்கும் பிலிப்பீனிய மொழிகளுக்கும் பஞ்சார் மொழிக்கும் இடையில் பொதுவான சொற்கள் பல காணப்படுகின்றன. இம்மொழியில் பல்வேறு பேச்சு வழக்குகள் காணப்படுகின்றன.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்கள்
[தொகு]- ஆண்: லலாக்கே
- பெண்: பபினே
- ஆம்: இயா
- இல்லை: எஞ்சா
- நீர்: அஎங்
- கதிரவன்: அரே
- நான்/எனக்கு: செங்-கோ'
- நீ: பெஎன்