மணீஷ் நர்வால்
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
நாடு இந்தியா | ||
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
2020 டோக்கியோ | கலப்பு 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல், SH1 பிரிவு |
மணீஷ் நர்வால் (Manish Narwal) (பிறப்பு: 17 அக்டோபர் 2001) இந்திய இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஆவார். அரியானா மாநிலம், பரிதாபாத் நகரத்தைச் சேர்ந்த இவர் சிறு கைத்துப்பாக்கி மூலம் குறி பார்த்துச் சுடும் வீரர் ஆவார். 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு 50 மீ கைத்துப்பாக்கி எசு எச்1 என்ற பிரிவில் தங்கப் பதக்கமும் 2024 பாரிசு இணை ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீ காற்றுக் கைத்துப்பாக்கி எசு. எச்.1 என்ற பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
இவர் இந்தியாவில், தேசிய அளவில் கைத்துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்ககங்களை வென்றுள்ளார்.[1][2][3] மேலும் இவர் உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆடவர் எசு. எச்.1 பிரிவில் நான்காம் இடத்தைப் பெற்றவர்.[4] இவர் கோஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை மூலம் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்றவர்.
2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில்
[தொகு]மணீஷ் நர்வால் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 4 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் கலப்புப் போட்டியில் எசு. எச்.1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் முதலிடம் வென்று தங்கப் பதக்கம் வென்றார்.[5] [6]
விருதுகள்
[தொகு]மணீஷ் நர்வால் 2020ஆம் ஆண்டில் அருச்சுனா விருது பெற்றவர்.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manish Narwal shoots second gold in Para-Shooting WC with new world record". Indian Express News. https://indianexpress.com/article/sports/sport-others/manish-narwal-shoots-second-gold-in-para-shooting-wc-with-new-world-record-7241813/.
- ↑ "Manish Narwal sets new world record at Para Shooting World Cup". International Olympic Committee News. https://olympics.com/en/news/manish-narwal-sets-new-world-record-at-para-shooting-world-cup.
- ↑ "Narwal lead Indian challenge at para shooting World Cup". Lokmat News. https://english.lokmat.com/other-sports/narwal-lead-indian-challenge-at-para-shooting-world-cup/.
- ↑ "Manish Narwal shoots gold in Para-Shooting WC with new world record". Times of India News. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/manish-narwal-shoots-gold-in-para-shooting-wc-with-new-world-record/articleshow/81654589.cms.
- ↑ "Tokyo Paralympics: Manish Narwal Wins Gold, Silver For Singhraj Adhana In 50m Mixed Pistol (SH1)". NDTV Sports.
- ↑ பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ஒரே போட்டியில் தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியா அசத்தல்!
- ↑ "Unprecedented eight para-sports personalities to receive national sports awards". Times of India News. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/unprecedented-eight-para-sports-personalities-to-receive-national-sports-awards/articleshow/77678812.cms.