மணிகுந்தலா சென்
மணிகுந்தலா சென் (Manikuntala Sen வங்காள மொழி: মণিকুন্তলা সেন ; c 1911-1987) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட முதல் பெண்களில் ஒருவர் ஆவார். இவர் தனது பெங்காலி -மொழி நினைவுக் குறிப்பான ஷெடினர் கோத்தா (ஆங்கிலத்தில் சுதந்திரத்தைத் தேடுதல்: முடிவடையாத பயணம் ) [1] அதில் இவர் இந்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலங்களில் ஒரு பெண் ஆர்வலராக தனது அனுபவங்களை விவரிக்கிறார். .
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மணிகுந்தலா சென் பரிசாலில் இப்போது வங்காளத்தில் பிறந்தார். தேசியவாத நடவடிக்கைகளுக்காக பரவலாக இந்த ஊர் அரியப்பட்டது. ஜாத்ரா நாடக ஆசிரியர் முகுந்தா தாஸ் இந்த ஊரில் பிறந்தவர் ஆவார். ஒரு முக்கிய தேசியவாதத் தலைவரும் கல்வியியலாளருமான அஸ்வினி குமார் தத்தா, இவரது குடும்பத்தின் நண்பர் ஆவார். சென்னின் ஆரம்ப கால வாழ்க்கையில் இவர் மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது.கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மணிகுந்தலா சென் இளங்கலைப் பட்டம் பெற்றார். முகோபாத்யாயா குறிப்பாக தனது மனதை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டார். 1923 இல் பிசால் சென்றிருந்த போது சென் காந்தியைச் சந்தித்தார், மேலும் விடுதலைக்காக பாடுபடும் ஒரு விபச்சாரிகளை இவர் ஊக்குவித்த விதம் இவரை மிகவும் கவர்ந்தது. இந்த குடும்பம் இறக்குமதி செய்யப்பட்ட துணிகளை அணிவதை நிறுத்தி, இந்தியர்களுக்கு சொந்தமான மற்றும் தேசியவாத இயக்கத்தின் சின்னமான பங்கலட்சுமி ஆலையினை ஆதரித்தது. [2] தீவிரவாதி அனுசீலன் சமிதி மிகவும் தீவிரமாக செயல்பட்ட பிறகு, பரிசால் புரட்சிகர அரசியலின் மையமாக இருந்தது. சென் ஒரு பெண்கள் பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார், அங்கு இவர் யுகாந்தர் கட்சியின் உறுப்பினரான சாந்திசுதா கோசை சந்தித்தார், இவருடைய நண்பர்கள் கார்ல் மார்க்சு மற்றும் லெனினின் எழுத்துக்களைப் படித்து பகிர்ந்து கொண்டது. மேலும் சாந்திசுதா கோசை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதைக் கண்டார். கல்கத்தாவுக்குச் சென்று படிப்பை முடிக்க அனுமதிக்குமாறு இவரது குடும்பத்தை வற்புறுத்திய சென், கம்யூனிச கட்சியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
கல்கத்தாவில் மாணவர்
[தொகு]அந்த நேரத்தில் வங்கத்தில் உள்ள இந்து பத்ரலோக் சமூகங்கள் தங்களின் மகள்களை மேலும் படிக்க அதிக தூரம் அனுப்புவதற்கு சம்மதம் தெரிவித்தனர். சென் தன்னைப் போன்ற இளம் பெண்களின் குழுவின் ஒரு பகுதியாக நகரத்தில் வாழ்ந்ததைக் கண்டார். இவர் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். சில சமயங்களில் இவள் சந்தித்த குடும்பங்களின் பழமைவாதமும் குறுகிய மனப்பான்மையும் இவரை வெறுப்பிற்குள்ளாக்கியது, மேலும் இவரும் இவருடைய நண்பர்களும் ஆண்களிடமிருந்து அடிக்கடி எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாக எழுதுகிறார். இவளது தோழி பிமல்பிரதிபா தேவியின் மூலம் இவள் மகிளா சக்தி சங்க தலைவர்கள் மற்றும் பல முக்கிய இந்திய தேசிய காங்கிரசு பெண்களுடன் பழகினார்; இது இவரது பெண்ணியச் சிந்தனையை வளர்த்தார் மற்றும் சமூகத்தில் பெண்களின் நிலையில் மாற்றத்தின் இவசியத்தை பற்றி சிந்திக்க தூண்டியது. இவர் சௌமியேந்திரநாத் தாகூரின் இந்திய புரட்சிகர கம்யூனிச கட்சியுடன் தொடர்பு கொண்டார்.
கட்சியின் ஈடுபாடு குறித்து ஆரம்பத்தில் இவரது பெற்றோர்கள் தெளிவில்லாமல் இருந்தனர், ஏனெனில் அது அதிகாரிகளால் விரும்பப்பட்ட ஆபத்தான கிளர்ச்சியாளர்களின் குழுவாகக் கருதப்பட்டது, ஆனால் 1939 இல் இவர் கம்யூனிஸ்ட் ஆன பிறகு, சென் தனது தாயை பிஸ்வநாத் முகர்ஜி உரையாற்றிய கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Sena, Maṇikuntalā (2001). In Search of Freedom: An Unfinished Journey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85604-26-6.
- ↑ Sengupta, Nitish K. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin Books. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0143416784.
மேலும் படிக்க
[தொகு]- Das Gupta, Uma (2003). "Book Reviews: Manikuntala Sen, In Search of Freedom: An Unfinished Journey (Translated from the Bengali)". Indian Journal of Gender Studies 10 (1): 179–182. doi:10.1177/097152150301000115.
- Ghosh, Sutanuka (19 July 2010). "Expressing the Self in Bengali Women's Autobiographies in the Twentieth Century". South Asia Research 30 (2): 105–123. doi:10.1177/026272801003000201.
- "Sen, Manikuntala".. (2008). DOI:10.1093/acref/9780195148909.001.0001.