மகாதேவ ஐயர் கணபதி
Appearance
மகாதேவா ஐயர் கணபதி (Mahadeva Iyer Ganapati) (1903 - 1976) எம். கணபதி என்றும் அழைக்கப்படும் இவர் [1] ஓர் இந்திய பொறியாளர் ஆவார், இவர் தேசிய திட்டங்களில் செய்த சாதனைகளுக்கு நன்கு அறியப்பட்டவர். ஒடிசாவில் உள்ள ரூர்கேலா இரும்பாலை, [2] மற்றும் மும்பையில் உள்ள சர்ச்ச்கேட் இரயில் நிலையம் மற்றும் சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் (சி.எல்.டபிள்யூ) உள்ளிட்ட பல இரயில்வே திட்டங்கள் இவரது தலைமையில் முடிக்கப்பட்டன. இந்திய அரசு இவருக்கு 1954 இல் தொடக்க பத்ம பூசண் விருது வழங்கியது . 1973-74 ஆம் ஆண்டுகளில் இந்தியப் பொறியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். [3]
இவர் தொடர்புடைய முக்கிய திட்டங்கள்:
- ரூர்கேலா இரும்பு ஆலை
- கண்ட்லா துறைமுகம் [4]
- வாரணாசியில் உள்ள மாலவியா பாலம் [5] [6]
- சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ்
- பெரம்பூர் ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலை,சென்னை
- விவேகானந்த சேது, கொல்கத்தா (துணைத் தலைவர்)
- சர்ச்கேட் ரயில் நிலையம் மற்றும் பிற மேற்கு ரயில்வே திட்டங்கள் [7] [8]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]- இரயில்வே வாரிய தங்கப் பதக்கம், 1950
- இந்தியப் பொறியியல் நிறுவனத்தின் ஆளுநர் பரிசு, 1953
- பத்ம பூசண் (1954) [9]
குறிப்புகள்
[தொகு]- ↑ India Who's Who, INFA Publications, 1973. p. 353
- ↑ The Corporate Story of SAIL by N. R. Srinivasan, Steel Authority of India Limited, 1990. p. 39 (Ganapati is spelled Ganapathy)
- ↑ List of Past Presidents of the Institution of Engineers (India)
- ↑ Railway Gazette, 103, p. 515, 1955
- ↑ Reference to paper by M. Ganapati in the Journal of the Institution of Engineers (India), p. 683, Bridge Engineering by Ponnuswamy, Tata McGraw Hill, 2008.
- ↑ photo of the plaque on the bridge showing M. Ganapathi's name as the Engineer-in-Charge
- ↑ Railway Gazette article by M. Ganapati, General Manager of the Western Railways (India)
- ↑ The Economics of Rail Transport by J. Johnson, 1963, Allied Publishers, p. 103, refers to two articles by M. Ganapati, General Manager of the Western Railways.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.