சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ்
நிறுவுகை | 26 சனவரி 1950 |
---|---|
நிறுவனர்(கள்) | இந்திய இரயில்வே |
தலைமையகம் | சித்தரஞ்சன், ஆசான்சோல் |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | மின்சார இரயில் எஞ்சின்கள் |
தாய் நிறுவனம் | இந்திய இரயில்வே |
இணையத்தளம் | www |
சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் (Chittaranjan Locomotive Works) ( வங்கம்: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தாய் நிறுவனம் இந்திய இரயில்வே ஆகும்.
மின் இரயில் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிடமான ஆசான்சோல் நகரத்திற்கு அருகே அமைந்த சலான்பூர் நகர்புறத்தில் உள்ள சித்தரஞ்சன் எனுமிடத்தில் உள்ளது.
,
மேலோட்டம்
[தொகு]இந்திய இரயில்வே நிறுவனத்தால் 26 சனவரி 1950ல் துவக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு, இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் நினைவாக சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் எனப் பெயரிடப்பட்டது. இந்நிறுவனத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையத்திற்கு சித்தரஞ்சன் இரயிவே நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.[1]
சித்தரஞ்சன் தொழிற்சாலை, அதன் 9,131 ஊழியர்களின் குடியிருப்புகள், 43 பள்ளிகள், 7 சந்தைகள், 200 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை மற்றும் 8 சுகாதார நிலையங்கள் கொண்ட சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் 191 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
26 சனவரி 1950ல் நீராவி இரயில் எஞ்சின்களை மட்டும் உற்பத்தி செய்த சித்தரஞ்சன் இரயில் எஞ்சின் தொழிற்சாலை, பின்னர் டீசல் இரயில் எஞ்சின்களையும்[2],1994 முதல் மின்சார இரயில் எஞ்சின்களையும் உற்பத்தி செய்கிறது.
இத்தொழிற்சாலைக்குத் தேவையான இரும்பு, நிலக்கரியை இந்திய உருக்கு ஆணையம் மற்றும் இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chitaranjan Railway Station
- ↑ Gudgin, D.S.E. (1976). Vulcan Foundry Locomotives 1832–1956. Truro: Bradford Barton. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85153-215-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Chittaranjan Locomotive Works (CLW) Company website