போச்சம்பள்ளி புடவை
போச்சம்பள்ளி புடவை | |
---|---|
போச்சம்பள்ளி புடவை அணிந்த ஒரு பெண். 1895, by Hermann Linde | |
குறிப்பு | பூதன் போச்சம்பள்ளியில் நெய்யப்பட்ட புடவை |
வகை | புடவை |
இடம் | பூதன் போச்சம்பள்ளி, [யதாத்ரி புவனகிரி மாவட்டம், தெலங்கானா |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 2005 |
பொருள் | Silk or Cotton |
போச்சம்பள்ளி சேலை அல்லது போச்சம்பள்ளி இகாட் என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்டம், பூதன் போச்சம்பள்ளியில் தயாரிக்கப்பட்ட சேலை வகையாகும். இப்புடவைகள் இகாட் பாணியில் சாயமிடுவதில் பாரம்பரிய வடிவியல் வடிவங்கள் பின்பற்றப்படுகின்றன. அழகிய வேலைப்பாடுகள் அமைஆ வடிவியல் வடிவமைப்புகள் புடவைகள் மற்றும் துணி வகைகள் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இந்திய அரசாங்கத்தின் அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கேபின் குழுவினர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போச்சம்பள்ளி பட்டுப் புடவைகளை அணிந்துள்ளனர். [1] [2]
வரலாறு
[தொகு]தெலுங்கானா இகாட் வகை சேலைகளை நெய்வதில் பண்டைய காலம் தொட்டே குஜராத் மற்றும் அண்டை ஒடிசா ஆகிய மாநிலங்களோடு இணைந்து சிறந்து விளங்கும் ஒன்றாகும்.. [3] பண்டைய காலங்களில் இந்தியாவில் சிறப்புப் பெற்று விளங்கிய நெசவு மையங்கள் விஜயவாடா மற்றும் சென்னைக்கிடையில் அமைந்துள்ள சிராலா மற்றும் ஜென்ட்ர்பேட்டா ஆகிய நகரங்களில் இருந்தன, ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவை செயல்படாமல் நிறுத்தப்பட்டன. தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்படும் உள்ளூரில், போச்சம்பள்ளி புடவைகள் பொகுடுபந்து, சிட்கி மற்றும் புத்தபாஷி என்று அழைக்கப்படுகின்றன, இது இந்தியாவின் பிற பகுதிகளில் போச்சம்பள்ளி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது, இது இப்புடபை உற்பத்தி செய்யப்படும் சிற்ரூரின் பெயரால் பெயரிடப்பட்டது. இது இந்தியாவில் உள்ள மற்ற இகாட் பாணி உற்பத்தி செய்யும் பகுதிகளிலிருந்து வேறுபட்ட வடிவமைப்புடன் தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது. இன்று, நெசவு பெரும்பாலும் போச்சம்பள்ளி கிராமத்தில் நடைபெறுகின்றன, அங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் உள்ளன. இது "இந்தியாவின் புடவை நெய்யும் குழு"வின் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய தளங்களின் யுனெஸ்கோ தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பட்டு நூலால் செய்யப்பட்ட கைக்குட்டைகள் "டெலி ரூமல்ஸ்" என்று அழைக்கப்பட்டு உலகப் புகழ் பெற்றன
நெசவு
[தொகு]போச்சம்பள்ளி, கோயல்குடம், சவுட்டுப்பாலா, ஸ்ரீபுரம், புவனகிரி, புட்டபகா மற்றும் கட்டப்பாலா போன்ற ஒரு சில கிராமங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் பெரும்பாலும் நல்கொண்டா மாவட்டத்தில் இந்த தனிப்பட்ட சிறப்புவாய்ந்த நெசவு நெய்யப்படுகிறது, போச்சம்பள்ளி இகாட் தனித்துவமானது அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவங்களுக்காக முதலில் நூலக்ளை மொத்தமாகத் தொகுத்து முறுக்கி வண்ணமேற்றுகின்றனர். ஊடு நூல்களை முதலில் பாவில் ஏற்றி அதன்பின்னர் வண்ணமேற்றிய நூல்களையும் சேர்த்து. பின்னர் அவை இரண்டும் ஒன்றாக நெய்யப்படுகிறது. இவ்வாற்று செய்வதால் இவை ’இரட்டை இகாட்’ துணிகள் என உலக அளவில் அறியப்படுகின்றன. பருத்தி, பட்டு மற்றும் சிக்கோ - பட்டு மற்றும் பருத்தியின் கலவையிலான நூல்கள் ஆகியவற்றிலும் இது நெய்யப்படுகிறது. இயற்கை மூலங்களில் இருந்தும் அதனுடைய கூட்டுக் கலவைகள் மூலமும் இதற்கான சாயங்கள் பெறுவது அதிகரித்துள்ளது..
80 கிராமங்களைக் கொண்ட போச்சம்பள்ளி, பாரம்பரிய தறிகளைக் கொண்டுள்ளது, அதன் வடிவமும் வடிவமைப்புகளும் பல நூற்றாண்டுகள் பழமையானவை. இன்று இந்த பட்டு நகரமானது இதனையே குடிசைத் தொழிலாகக் கொண்டுள்ள 100 கிராமங்களையும் 10,000 க்கும் மேற்பட்ட நெசவு குடும்பங்களையும் கொண்டுள்ளது. இந்த வகைத் துணியானது கூட்டுறவுச் சங்கம், இதனோடு தொடர்புடைய பல நிறுவனங்கள், திறமையான நெசவாளர்கள் மற்றும் போச்சம்பள்ளியில் உள்ள வணிக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நூல் விற்பனை, கைத்தறி பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பனை ஆகியவற்றின் அடிப்படையில் ரூ .10,00,000,00 க்கும் மேற்பட்ட வணிகத்தை போச்சம்பள்ளி மேற்கொள்கிறது. 2010 ஆம் ஆண்டில் அரசாங்கம் இக்குழுக்களை போச்சம்பள்ளி 1 மற்றும் போச்சம்பள்ளி 2 என இரண்டு குழுக்களாகப் பிரித்த போதிலும் அவை பொதுவான நெசவு மையங்கள் என்பதை நிரூபித்தே வருகிறது. நலிவடைந்து வரும் இந்தக் கலையை அதன் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, புதுப்பிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
புவிக்குறியீடு உரிமைகள்
[தொகு]போச்சம்பள்ளி சேலை 2005 இல் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு அல்லது புவியியல் அடையாளம் (ஜிஐ) அந்தஸ்தைப் பெற்றது. [4] போச்சம்பள்ளி இகாட் என்பது போச்சம்பள்ளி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் போச்சம்பள்ளி கைத்தறி அச்சு மற்றும் சாய பட்டுப்புடவை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட சொத்தாகும். [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Pochampally sarees go places". Nalgonda, Telangana: தி இந்து. 2004-01-17. http://www.thehindu.com/2004/01/17/stories/2004011702920300.htm. பார்த்த நாள்: 2015-04-21.
- ↑ "Pochampally silk sarees for AI airhostesses". Hyderabad, India. 2004-02-09. http://www.thehindubusinessline.com/2004/02/09/stories/2004020901281300.htm. பார்த்த நாள்: 2015-04-21.
- ↑ Ikat Textiles of India
- ↑ "Facilitation of IPR Protection through Geographical Indications: Pochampally". Ministry of Textiles, Government of India. Archived from the original on 2015-04-27. பார்க்கப்பட்ட நாள் 2015-04-21.
- ↑ "GI Research: Pochampally". Ministry of Textiles, Government of India. Archived from the original on 2013-05-12.