உள்ளடக்கத்துக்குச் செல்

பைன் தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
sağ
sağ

பைன் தேன் (Pine honey)(கிரேக்கம்: πευκόμελο‎; துருக்கியம்: çam balı) என்பது ஒரு வகை தேன்.[1] இது இனிப்பு, காரம், சில மரப் பட்டைகளின் சுவையுடன் பிசின் வாசனை அடர் ஆம்பர் நிறம் கொண்ட திரவம். இது துருக்கி மற்றும் கிரேக்க நாட்டில் பொதுவான உண்ணப்படும் காலை உணவாகும். இது இன்தயிர் மீது தூவப்பட்டு ரொட்டியுடன் உண்ணப்படுகிறது.

பைன் தேன் உற்பத்தி

[தொகு]

பைன் தேன் ஒரு அசாதாரண தேன். ஏனெனில் இது தேனீக்களால் முழுமையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. சில பைன் மரங்களின் சாற்றில் வாழும் மார்ச்சலினா கெலெனிகா என்ற செதில் பூச்சி சிற்றினத்திலிருந்து சுரக்கப்படும் தேனை (சர்க்கரை சுரப்பு) சேகரிக்கும் தேனீக்களால் பன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.[2] மா. கெலெனிகா துருக்கிய பைன் (பைனசு புருட்டியா), பைனஸ் மரம் (பைனசு காலெபென்சிசு), ஆத்திரிய பைன் (பைனசு நிக்ரா), இசுகாட்சு பைன் (பைனசு சில்வெசுடிரிசு) மற்றும் கல் பைன் (பைனசு பினியா) ஆகியவற்றில் காணப்படுகிறது.

உலக பைன் தேன் உற்பத்தி

[தொகு]

பைன் தேன் பொதுவாகப் பூக்கள் அல்லது பழ மர பூக்கள் போன்ற வழக்கமான தேன் ஆதாரங்கள் குறைவாகவே உள்ள பைன் காடுகள் எங்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெர்மனி, நார்வே, இத்தாலி,[3] நியூசிலாந்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக காடுகள் நிறைந்த சில பகுதிகளில் இது காணப்படுகிறது. ஆனால் முதன்மையாகக் கிழக்கு மத்தியதரைக் கடலின் பைன் காடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.[2][4][5] முக்கியமாக உற்பத்தி துருக்கி, மத்திய கிழக்கு, பால்கன் மற்றும் பல கிரேக்க மலைகள் மற்றும் தீவுகளில் செய்யப்படுகிறது. கிரேக்கத்தில் உள்ள அதோஸ் மலையில் உள்ள துறவற சமூகங்கள் பைன் தேன் உற்பத்திக்குப் புகழ்பெற்றவை. கிரீசு முழுவதும் பைன் தேன் உற்பத்தி மொத்த தேன் உற்பத்தியில் 60-65% ஆகும்.[6] உலகின் 92% பைன் தேனைத் துருக்கி உற்பத்தி செய்கிறது.[7][8] முலா மாகாணம் துருக்கிய பைன் தேன் உற்பத்தியில் 80% பங்குவகிக்கும் நாடு ஆகும்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Marchese, C. Marina (2011-05-20). Honeybee: Lessons from an Accidental Beekeeper. Running Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60376-239-7.
  2. 2.0 2.1 de-Miguel, Sergio; Pukkala, Timo; Yeşil, Ahmet (2014-05-01). "Integrating pine honeydew honey production into forest management optimization". European Journal of Forest Research 133 (3): 423–432. doi:10.1007/s10342-013-0774-2. de-Miguel, Sergio; Pukkala, Timo; Yeşil, Ahmet (2014-05-01). "Integrating pine honeydew honey production into forest management optimization". European Journal of Forest Research. 133 (3): 423–432. doi:10.1007/s10342-013-0774-2. S2CID 12647284.
  3. "Il miele di melata". www.bioapi.it. Archived from the original on 25 April 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  4. "All About German Honey - Germanfoods.org" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  5. "Honeydew – Forest Honeys". Honey Traveler (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Gounari, S (2006-03-01). "Studies on the phenology of Marchalina hellenica (Gen.) (Hemiptera: Coccoidea, Margarodidae) in relation to honeydew flow". Journal of Apicultural Research: 8–12. doi:10.3896/IBRA.1.45.1.03. http://www.ibra.org.uk/articles/20080612_28. 
  7. "Turkey makes over 90 percent of pine honey production worldwide". DailySabah. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
  8. The Turkish Bee Keeping and Honey Sector, United States Department of Agriculture, 2015
  9. "Muğla'da çam balı üretimi yüze 50 düştü". Dünya Gazetesi. 2016-01-06. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைன்_தேன்&oldid=4110542" இலிருந்து மீள்விக்கப்பட்டது