பெர்னாண்டோ பெரால்டா
பெர்னாண்டோ பெரால்டா | |
---|---|
நாடு | அர்கெந்தீனா |
பிறப்பு | திசம்பர் 16, 1979 உலோமாசு டி சமோரா |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2004) |
பிடே தரவுகோள் | 2573 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2632 (பிப்ரவரி 2013) |
பெர்னாண்டோ பெரால்டா (Fernando Peralta) அர்கெந்தீனா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார்.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]1997 ஆம் ஆண்டில் பெரால்டா பான் அமெரிக்க இளையோர் சதுரங்கப் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றார். இவர் பல சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் அர்கெந்தினா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
2006, 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் வென்று பெர்னாண்டோ பெரால்டா மூன்று முறையாக அர்கெந்தினா நாட்டின் சதுரங்க வெற்றியாளராக உள்ளார். இறுதிச் சுற்றில் பாப்லோ அகோசுடாவை தோற்கடித்து லியாண்ட்ரோ கிரிசா மற்றும் சாண்ட்ரோ மரேகோ ஆகியோரை விடவும் அதிகப்புள்ளிகள் எடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான பட்டத்தை இவர் வென்றார்.[2]
பெரால்டா 2007 ஆம் ஆண்டில் சதுரங்க உலகக் கோப்பையில் போட்டியிட்டார். அங்கு அவர் முதல் சுற்றில் எர்னசுட்டோ இனார்கீவ் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[3] பெரால்டா மீண்டும் 2023 ஆம் ஆண்டுக்கான சதுரங்க உலகக் கோப்பையில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GM Fernando Rodrigo Peralta".
- ↑ "Fernando Peralta wins 2022 Argentine Championship". December 11, 2022.
- ↑ List of Qualifiers for the World Cup 2007 பரணிடப்பட்டது 2008-04-12 at the வந்தவழி இயந்திரம் from fide.com, accessed 2008-04-10.
- ↑ "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced".