பெரும் விளையாட்டு
பெரும் விளையாட்டு (The Great Game) என்பது ஓர் அரசியல் மற்றும் தூதரகப் போட்டியாகும். இது பெரும்பாலான 19ஆம் நூற்றாண்டு மற்றும் ஆரம்ப 20ஆம் நூற்றாண்டு காலத்தில் பிரித்தானியப் பேரரசு மற்றும் உருசியப் பேரரசு ஆகிய இரண்டிற்கும் இடையே ஆப்கானித்தான் மற்றும் அதனை ஒட்டி நடு மற்றும் தெற்காசியாவில் அமைந்திருந்த பகுதிகளை வைத்து நடைபெற்றது. இது பாரசீகம் மற்றும் பிரித்தானிய இந்தியாவிலும் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தியது.
நடு ஆசியாவில் உருசியா விரிவடைந்ததன் காரணமானது இந்தியா மீது படையெடுப்பது தான் என பிரிட்டன் அஞ்சியது. பிரிட்டன் நடு ஆசியா மீது விரிவாக்கம் செய்யும் என உருசியா அஞ்சியது. இரண்டு பெரிய ஐரோப்பியப் பேரரசுகளுக்கு இடையே நம்பிக்கையின்மை மற்றும் போர்ப் பதற்றம் நிறைந்த கடினமான சூழ்நிலை நிலவியது.[1] இந்தியாவைக் காப்பாற்றிக் கொள்ள பிரிட்டன் முயற்சித்தது. அதே நேரத்தில், நடு ஆசியாவில் தனது விரிவாக்கத்தையும் உருசியா தொடர்ந்தது.[2] உருசிய வரலாற்றாளர்கள் கூற்றுப்படி, 1801க்கு பிறகு இந்தியா பற்றி நினைக்கவோ அல்லது திட்டமிடவோ உருசியாவுக்குச் சிறிதளவே எண்ணம் இருந்தது. இது பெரும்பாலும் பிரிட்டனின் நம்பிக்கையின்மை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.[3] 19ஆம் நூற்றாண்டில் பல்வேறு படையெடுப்புத் திட்டங்கள் திட்டமிடப்பட்ட போதும், பிற்காலத் திட்டங்கள் செயலாக்கம் பெறவில்லை. அவற்றில் முக்கியமானவை கிரிமியப் போர் பற்றிய துகாமல் மற்றும் குருலேவ் திட்டங்கள் ஆகியவையாகும்.[4]
உசாத்துணை
[தொகு]- ↑ Ewans 2004, ப. 1.
- ↑ "The Great Game, 1856-1907: Russo-British Relations in Central and East Asia | Reviews in History". reviews.history.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ Jelavich, Barbara (1974). St. Petersburg and Moscow : Tsarist and Soviet foreign policy, 1814-1974. Bloomington: Indiana University Press. pp. 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-35050-6. இணையக் கணினி நூலக மைய எண் 796911.
- ↑ Korbel, Josef (1966). Danger in Kashmir. Princeton, N.J. p. 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-7523-8. இணையக் கணினி நூலக மைய எண் 927444240.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)