உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் அமீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தான் அமீரகம்
د افغانستان امارت
ட ஆஃப்கானிஸ்தான் அமாரத்
1823–1926
கொடி of ஆப்கானித்தான்
கொடி
சின்னம் of ஆப்கானித்தான்
சின்னம்
1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான்
1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான்
நிலைபிரித்தானிய கையாளுகை (1839-1842)
பிரித்தானியர் பாதுகாப்பில் (1879–1919)
தலைநகரம்காபூல்
பேசப்படும் மொழிகள்பஷ்தூ, பாரசீகம்
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்இசுலாமிய சமயச்சார்பான முழுமையான முடியாட்சி
அமீர் 
 1823–1829 (முதல்)
தோஸ்த் மொகமது கான்
 1919–1926 (கடைசி)
அமனுல்லாகான்
சட்டமன்றம்லோயா ஜிர்கா
வரலாற்று சகாப்தம்19வது நூற்றாண்டு
 தொடக்கம்
1823
 முடிவு
1926
பரப்பு
1893652,225 km2 (251,825 sq mi)
நாணயம்ஆப்கன் ரூபாய்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAF
முந்தையது
பின்னையது
துராணிப் பேரரசு
ஆப்கானித்தான் இராச்சியம்
பிரித்தானிய இராச்சியம்

ஆப்கானித்தான் அமீரகம் (Emirate of Afghanistan, பஷ்தூ: د افغانستان امارت ) நடு ஆசியாவிற்கும் தெற்கு ஆசியாவிற்கும் இடையிலிருந்த அமீரகம் ஆகும்; இது தற்போது இசுலாமிய ஆப்கானித்தானியக் குடியரசாக இருக்கின்றது. துராணிப் பேரரசிலிருந்து இது பிரிந்து தோஸ்த் மொகமது கானால் உருவாக்கப்பட்டது; அவர் காபூலில் பராக்சாய் அரசமரபை நிறுவினார். இந்த அமீரகத்தின் வரலாற்றில், நடு ஆசியாவில் முதன்மை வகிக்க உருசியப் பேரரசுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே நடந்த ' நிழல் போட்டி' பெருமளவில் இடம் பிடித்திருந்தது. இக்காலத்தில் ஆப்கானித்தானத்தில் ஐரோப்பியர் தாக்கம் மிகுந்திருந்தது; தெற்கு ஆசியாவில் ஐரோப்பியரின் குடியேற்ற விரிவாக்கம் நிகழ்ந்தது. ஆப்கானித்தான் அமீரகம் சீக்கியப் பேரரசுடனான போரைத் தொடர்ந்தது; இதனால் பிரித்தானியர்-தலைமையிலான இந்தியப் படைகள் ஆப்கானித்தானைக் கைப்பற்றி 1842இல் ஆப்கானித்தானை முற்றிலும் அழித்தன. இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போரின்போது, பிரித்தானியர்கள் மீண்டும் ஆப்கானித்தானை முறியடித்தனர்; இச்சமயம் பிரித்தானியர் ஆப்கானித்தானின் வெளிநாட்டு விவகாரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர். மூன்றாம் ஆங்கில-ஆப்கானித்தானியப் போரில் வென்ற அமனுல்லாகான் 1919இல் கண்ட உடன்படிக்கையின்படி முழுமையான அதிகாரத்தை மீட்டுக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A Selection of Historical Maps of Afghanistan
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்கானித்தான்_அமீரகம்&oldid=2986364" இலிருந்து மீள்விக்கப்பட்டது