பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
Appearance
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலா பயணிகளுக்காக விசைப்படகுகள் இயக்கும் பூம்புகார் கப்பல்க் கழகம் | |
நிறுவுகை | 11 ஏப்ரல் 1974 |
---|---|
தலைமையகம் | சென்னை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு |
தொழில்துறை | பொது கப்பல் போக்குவரத்து சேவை |
உரிமையாளர்கள் | தமிழ்நாடு அரசு |
தாய் நிறுவனம் | தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை |
இணையத்தளம் | www.tamilship.com |
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் (Poompuhar Shipping Corporation Limited), தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[1] இந்நிறுவனத்தின் கப்பல்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து ஏற்றி வருகிறது. மேலும் சுற்றுலா தலங்களில் குறிப்பாக கன்னியாகுமரியின் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலா பயணிகளை விசைப்படகுகளில் ஏற்றிச் செல்கிறது.[2]