பூனம் முத்ரேஜா
பூனம் முத்ரேஜா | |
---|---|
தேசியம் | இந்தியர் |
கல்வி | தில்லி பல்கலைக்கழகம், ஹார்வர்ட் கென்னடி பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | உளவியளில் இளங்கலை, பொது நிர்வாகத்தில் முதுகலை |
பட்டம் | இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் |
பூனம் முத்ரேஜா இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். [1] சமூக காரணங்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவி அதற்க்கு தலைமை தாங்குதல், கொள்கை மற்றும் கோட்பாடுகளை வகுப்பது, நிறுவன திறனை மேம்படுத்துதல், சமூக நலனுக்கான தகவல்தொடர்புகளை வலுப்படுத்துதல், தொழிநுட்ப புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் அதற்கு முன்னோடிகளை தயாரித்து,மேம்படுத்துதல், மானியங்கள் அளித்தல், தேவையான நுட்பங்களையும், அறிவையும் கற்பித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் என சமூக வளர்ச்சித் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். பி எப் ஐ நிறுவனத்தில் இணைவதற்கு முன்பதாக, இவர் மெக்ஆர்தர் அறக்கட்டளையின் இந்திய அலுவலகத்தின் இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். மக்கள் தொகை மற்றும் இனப்பெருக்க சுகாதார மானியங்களுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்துள்ளார். [2]
திருமதி முத்ரேஜா இந்தியாவில் உள்ள அரசு சாரா அமைப்புகள் துறையில் தீவிர பங்களிப்பை செய்துள்ளார். [3] அவர் ஆளுமை மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பல தேசிய மற்றும் சர்வதேச அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டவர். கைவினைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தஸ்த்கர்(DASTKAR) அமைப்பின் நிறுவனர்களில் பூனம் முத்ரேஜாவும் ஒருவராவார்; மேலும் 1984 ம் நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு உதவிய நிவாரண முயற்சிகளில் ஒன்றான நக்ரிக் ஏக்தா மஞ்ச் அமைப்பின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில், அசோகா அறக்கட்டளை, இந்தியா (அதன் நிறுவனர் இயக்குநராக), கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பழங்குடியினர் முயற்சிகளுக்கான சங்கம் (SRUTI) போன்றவைகளையும் ஆரம்பித்து, அதன்மூலம் பெண்கள் சுகாதாரத் துறையில் கவனம் செலுத்தியுள்ளார்.\. [4]
1970 ஆம் ஆண்டு காலஞ்சென்ற ஜே.ஆர்.டி டாடா மற்றும் டாக்டர் பரத் ராம் தலைமையிலான சமூக ஈடுபாடு கொண்ட தொழிலதிபர்கள் குழுவால் நிறுவப்பட்ட, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையானது, இந்தியாவில் மக்கள்தொகை நிலைப்படுத்துதல் மற்றும் மக்கள்தொகை மற்றும் மனித மேம்பாடு பற்றிய உலகளாவிய சிந்தனையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இது ஒரு தேசிய அரசு சாரா அமைப்பாகும், அதன் பிரபலமான, ஊடக முன்முயற்சி நிகழ்வான, மெயின் குச் பி கர் சக்தி ஹூன் ( நான், ஒரு பெண், எதையும் சாதிக்க முடியும்) உடன் இணைந்து உருவாக்கியுள்ளார், இந்நிகழ்ச்சி மூன்று வெற்றிகரமான பருவங்களைத் தாண்டி 183 அத்தியாயங்கள் கடந்து சுமார் 150 மில்லியன் ஒட்டுமொத்த டிவி பார்வையாளர்களை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. [5] [6]
முத்ரேஜா, டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் பட்டமும் அதைத்தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி அரசுப் பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், பெற்றுள்ளார். [7] அவர் UNDP உடன் நாட்டின் பிரதிநிதி ஆலோசகராக பணியாற்றியுள்ளார். மாசசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜ், பல்கலைக்கழக உதவியுடன் 1986 - 1992 ஆண்டுகளில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் வறுமை பிரச்சினைகளில் கொள்கை வகுப்பாளர்களை வழிநடத்தும் ஒரு சுற்றுச்சூழல் திட்டத்தை முத்ரேஜா தலைமையேற்று நடத்தியுள்ளார்.மேலும் மைனில் உள்ள ஹாம்ப்ஷயர் கல்லூரி மற்றும் இந்தியானாவில் உள்ள ஏர்ல்ஹாம் கல்லூரி (இலையுதிர் காலம் 1992) ஆகிய இரண்டிலும் சமூக நடவடிக்கை மற்றும் மனித மேம்பாடு குறித்த படிப்புகளை அவர் கற்பித்துள்ளார். [8] [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Better income, education, family planning access will control population, says Poonam Muttreja".
- ↑ "Integrate Family Planning And Sexual And Reproductive Health Services In Nutrition Programming". 8 September 2021.
- ↑ "Increasing marriage age of women is treating symptom rather than cause". 16 December 2021.
- ↑ "Public health does not seem to be a priority in the budget". 2 February 2022.
- ↑ "TV Show 'Main Kuch Bhi Kar Sakti Hoon' on Women with Overall TV Viewership of 150 Million Win". 7 December 2020.
- ↑ "I can achieve anything I want". 23 June 2017.
- ↑ "To tackle covid in rural india, enable at-home care, involve panchayats". 15 May 2021.
- ↑ "Experts Speak: After Padman, It's Time for a State Menstruation Policy". 8 March 2018.
- ↑ "Poonam Muttreja" (PDF).