பூண்டு உரொட்டி
Appearance
பூண்டு ரொட்டி என்பது பூண்டைத் தூவி அல்லது அதன் சாற்றை ஊற்றி, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இட்டு தயாரிக்கப்படும் ஒருவகை பகெத்தாகும். ஆர்கனோ மற்றும் இனப்பூண்டும் பயன்படலாம். சுடப்பட்டோ பொறிக்கப்பட்டோ வறுக்கப்பட்டோ இது பரிமாறப்படுகிறது.[1][2]
பூண்டு ரொட்டி | |
வகை | உரொட்டி |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | சேருணவு |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாகவும் குளிர்மையாகவும் இதமாகவும் |
முக்கிய சேர்பொருட்கள் | பகெத், பூண்டு, ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் |
தயாரிப்பு
[தொகு]அரைவேக்காடாய் சுடப்பட்ட பகெத்தை பிரித்து அதில் துருவிய, மசக்கிய அல்லது பொடிப்பட்ட பூண்டைச் சேர்த்து ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு மூடி, சுடப்பட்டோ பொறிக்கப்பட்டோ வறுக்கப்பட்டோ பூண்டு ரொட்டி பரிமாறப்படுகிறது. பூண்டு பீட்சா உள்ளிட்ட உணவுகளுக்கும் இது அடிப்படையாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தயாாரிக்கப்படும் பூண்டு ரொட்டி இத்தாலியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. [3]