உள்ளடக்கத்துக்குச் செல்

புலியொரு காலமும் பணியாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலியொரு காலமும் பணியாது என்பது ஒரு ஈழப் போராட்டப் பாடல். இப்பாடலை மேஜர் சிட்டு பாடியிருந்தார். பொன். கணேசமூர்த்தி எழுதியிருந்தார். இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.

பாடல் வரிகள்

[தொகு]

புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது -எங்கள்
நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை
எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும் -சில
மந்திகள் கொடிதாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை

பட்டினிக்கு வட்டியில்லை
வாவா... -இனி
குட்டநின்று வாழ்வதில்லை வாவா

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்
பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி
மலந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்
வாவா... -இனி
சாவதேனும் ஓய்வதில்லை வாவா

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்
களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி
மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை தேதியில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமின்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு
வாவா... -எங்கள்
ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா