உள்ளடக்கத்துக்குச் செல்

பொன். கணேசமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன். கணேசமூர்த்தி
பிறப்புபொன்னுத்துரை கணேசமூர்த்தி
இறப்புஆகஸ்ட் 4, 2006
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்பொன்னுத்துரை, அன்னலட்சுமி

பொன். கணேசமூர்த்தி (இறப்பு: ஆகஸ்ட் 4, 2006, யாழ்ப்பாணம்), தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.

குடும்ப விபரம்

[தொகு]

இவருடைய மூன்றாவது மகன் மதனமௌலி (2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன்) போராட்டத்தில் வீரச்சாவடைந்தார்.[1][2][3][4][5]

நாடகத் துறையில்

[தொகு]

பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் வைகறை, இலங்கை மண் , "பொன் பரப்பித்தீவு" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற முழுநீள திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.

பொன் கணேசமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்:

  • இரட்டை முகங்கள்
  • சந்தன கட்டைகள்
  • சந்தனக்காடு

வானொலிக் கலைஞர்

[தொகு]

வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார். வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

இவரது பாடல்கள்/பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுகள்

[தொகு]
  • வாழ்த்துங்கள் நெஞ்சங்களே... (செஞ்சோலை)
  • சோலையிலே பாடும்... (செஞ்சோலை)
  • தமிழீழ மொட்டுக்கள்
  • சூரியப் புதல்விகள்
  • கடற்கரும்புலிகள் பாகம் 04
  • அடடா பகையே வாடா வாடா... (கடற்கரும்புலிகள் பாகம் 05)[6]
  • புலியொரு காலமும் பணியாது...
  • முன்னேறிப் பாய்வதென்ன அம்மா (முன்னேறிப் பாய்வதென்ன அம்மா)[7]
  • வைகறை வேளை இது புலர்கின்ற அதிகாலை[8]
  • மாவீரர் அவர் மலையினில் எரிகின்ற தீபம்[8]
  • தமிழீழத்தின் வானத்தை ஆசையில் மூடுது மழை மேகம்[8]
  • ஓ வரும் வரும் மரணம் (நெருப்பு நிலவுகள்)[9]
  • நீரடித்து நீரிங்கு விலகாது அம்மா (நெருப்பு நிலவுகள்)[9][10]
  • ஆகாயம் பூச்சிரிக்க அழகுநிலா விளக்கெரிக்க (நெருப்பு நிலவுகள்)[9]

மரணம்

[தொகு]

இவர் ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாமனிதர் விருது

[தொகு]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்[11].

வெளியிடப்பட்ட நூல்கள்

[தொகு]
  • தூரம் தொடுவானம் (நாவல்)
  • துளித்துளி வைரங்கள் "Droplet Diamonds" (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)
  • எடுக்கவோ தொடுக்கவோ (கவிதைத்தொகுதி)
  • இலங்கை மண் (நாடகம், 2008)
  • "துளித்துளியாய்.." (நாவல்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ ஈழநாதம் 1993.04.19 பக். 6.
  2. ↑ ஈழநாதம் 1994.09.23 பக். 12.
  3. ↑ ஈழநாதம் 1994.10.13 பக். 6.
  4. ↑ ஈழநாதம் 2005.07.26 பக். 2.
  5. ↑ 2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன் – Veeravengaikal
  6. ↑ இசை: ஜேர்மன் கண்ணன், பாடியவர்கள்: ஜேர்மன் கண்ணன், சிவநேசன்.
  7. ↑ இசை: தமிழீழ இசைக்குழு, பாடியவர்கள்: தியாகராஜா, வினோ.
  8. 1 2 3 "வைகறை" திரைப்படம் (இசை: முரளி, பாடியவர்: இரா. செங்கதிர்).
  9. 1 2 3 'வெளிச்சம்' இதழ் புரட்டாதி 1995 - பக். 69-71.
  10. ↑ ஈழநாடு 1995.10.15 - பக். 5.
  11. ↑ பொன். கணேசமூர்த்திக்கு "மாமனிதர்" விருது: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._கணேசமூர்த்தி&oldid=4651364" இலிருந்து மீள்விக்கப்பட்டது