புரோபார்கைல்
Appearance
கரிம வேதியியலில் புரோபார்கைல் (Propargyl) என்பது 2- புரோபீனைலின் ஓர் ஆல்க்கைல் வேதிவினைக் குழுவாகும். மூலக்கூற்று அமைப்பு HC≡C−CH2− எனப் பெற்றிருக்கும் இச்சேர்மம் ஆல்க்கைன் புரோப்பீனில் இருந்து வருவிக்கப்படுகிறது.
புரோபார்கைலிக் என்ற சொல் ஆல்க்கைனைல் தொகுதியை அடுத்த ஒரு வகை மூலக்கூற்று கட்டமைப்பின் நிறைவுற்றத் தன்மையைக் (sp3-கலப்பினம்) குறிக்கிறது. புரோப்பீன் மற்றும் அர்செண்டம் எனப்படும் கனிம வேதியியல் தனிமம் வெள்ளி முதலியவற்றின் கலப்பில் இருந்து புரோபார்கைல் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது. விளிம்புநிலை ஆல்க்கைன்கள் குறிப்பாக வெள்ளி உப்புகளுடன் நிகழ்த்தும் வினை இப்பெயருக்கான அடிப்படையாகும்.
ஒரினபுரோபார்கைலிக் என்ற சொல்லும் இதே முறையில் பொருள் கொள்ளப்படுகிறது.
- மூலக்கூற்று கட்டமைப்பின் நிறைவுற்ற நிலைக்கு அடுத்துள்ள புரோபார்கைலிக் தொகுதி மற்றும் ஆல்க்கைன் பகுதிக் கூறின் இரண்டு பிணைப்புகள்[1].
- ஒரு 3-பியூட்டைனைல் பிரிவு HCC-CH2CH2- அல்லது பதிலீட்டு செய்யப்பட்ட ஒத்திசைவினம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ferreira, Franck; Denichoux, Aurélien; Chemla, Fabrice; Bejjani, Joseph (2004). "Highly Diastereoselective Syntheses of Propargylic Acid and Homopropargylic Systems". Synlett (12): 2051–2065. doi:10.1055/s-2004-832816.