புனித சாவா தேவாலயம்
Appearance
புனித சாவா தேவாலயம் | |
---|---|
முன் பக்கம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பெல்கிறேட், சேர்பியா |
புவியியல் ஆள்கூறுகள் | 44°47′53.1″N 20°28′6.78″E / 44.798083°N 20.4685500°E |
சமயம் | சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை |
இணையத் தளம் | அதிகாரபூர்வ இணையத்தளம் (செர்பிய மொழி) |
புனித சாவா தேவாலயம் (ஆங்கில மொழி: Church of Saint Sava) என்பது சேர்பியாவின் பெல்கிரேட்டில் அமையப்பட்டுள்ள ஓர் சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயம் ஆகும். இது உலகிலுள்ள கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயங்களில் பெரியதும்,[1] உலகிலுள்ள பத்து பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றும் ஆகும். இது சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை நிறுவுனரும் மத்திய கால சேர்பியாவின் முக்கிய நபர்களில் ஒருவருமான புனித சாவா என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விராகா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இங்குதான் புனித சாவாவின் எச்சங்கள் சினான் பாசா எனும் ஓட்டமானிய மாமந்திரியால் 1595 இல் எரிக்கப்பட்டன.
உசாத்துணை
[தொகு]- ↑ J. Gordon Melton; Martin Baumann (21 September 2010). Religions of the World, Second Edition: A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. ABC-CLIO. pp. 510–512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-204-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ இணையத்தளம் (செர்பிய மொழி)