உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் கதைகள்
நூலாசிரியர்எம். வேதசகாயகுமார் (தொகுப்பு)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்புதுமைப்பித்தன் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2002 (முதல் பதிப்பு)
பக்கங்கள்800

புதுமைப்பித்தன் கதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் எம். வேதசகாயகுமார் இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளைக் கொண்ட முழுமையான தொகுப்பாகும். புதுமைப்பித்தன் பதிப்பகத்தாரால் இதன் முதல் பதிப்பு 2002 ஆம் ஆண்டும் 2008 ஆம் ஆண்டில் மறுபதிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நூல் புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புதுமைபித்தன் கதைகள் - சில ஆய்வுக் குறிப்புகள் எனத் தலைப்பிடப்பட்ட ஆசிரியரின் முன்னுரை புதுமைப்பித்தனின் கதைகளை அடையாளங்காண எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரங்களையும் விளக்குகிறது. முன்னுரையைத் தொடர்ந்து 103 சிறுகதைகளும் வரிசையாக இடம்பெற்றுள்ளன. அட்டையின் பின்புறம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை இடம்பெற்றுள்ளது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் தொகுப்புகள் பல, வெவ்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு வெவ்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.

103 சிறுகதைகள்

[தொகு]
  • சாளரம்
  • ஆற்றங்கரைப் பிள்ளையார்
  • சங்குத்தேவனின் தர்மம்
  • பொன்னகரம்
  • திருக்குறள் செய்த திருக்கூத்து
  • கட்டில் பேசுகிறது
  • மோட்சம்
  • ராமநாதனின் கடிதம்
  • காளி கோவில்
  • உணர்ச்சியின் அடிமைகள்
  • நிகும்பலை
  • நியாயம்
  • கவந்தனும் காமனும்
  • புதிய நந்தன்
  • செல்வம்
  • இது மிஷின்யுகம்
  • ஒப்பந்தம்
  • தனி ஒருவனுக்கு
  • திறந்த ஜன்னல்
  • பறிமுதல்
  • அகல்யை
  • தெரு விளக்கு
  • கடிதம்
  • நல்ல வேலைக்காரன்
  • நன்மை பயக்குமெனின்
  • சித்தம் போக்கு
  • தியாகமூர்த்தி
  • கண்ணன் குழல்
  • பயம்
  • வாடா மல்லிகை
  • கொடுக்காய்ப்புளி மரம்
  • நம்பிக்கை
  • புதிய ஒளி
  • கனவுப் பெண்
  • சாயங்கால மயக்கம்
  • தேக்கங் கன்றுகள்
  • பித்துக்குளி
  • இரண்டு உலகங்கள்
  • புதிய கந்த புராணம்
  • குப்பனின் கனவு
  • பாட்டியின் தீபாவளி
  • ஆண்மை
  • கடவுளின் பிரதிநிதி
  • கோபாலய்யங்காரின் மனைவி
  • கொலைகாரன் கை
  • சணப்பன் கோழி
  • சமாதி
  • மாயவலை
  • பால்வண்ணம் பிள்ளை
  • அந்த முட்டாள் வேணு
  • இலக்கிய மம்ம நாயினார் புராணம்
  • கொன்ற சிரிப்பு
  • செவ்வாய் தோஷம்
  • நொண்டி
  • இந்தப்பாவி
  • கருச்சிதைவு
  • சொன்ன சொல்
  • வழி
  • வெளிப்பூச்சு
  • கோபாலபுரம்
  • ’பூசணிக்காய்’ அம்பி
  • சாமாவின் தவறு
  • கலியாணி
  • துன்பக் கேணி
  • டாக்டர் சம்பத்
  • சிற்பியின் நகரம்
  • ஞானக்குகை
  • வாழ்க்கை
  • புதிய கூண்டு
  • பிரம்ம ராக்ஷஸ்
  • விநாயகர் சதுர்த்தி
  • ஒருநாள் கழிந்தது
  • பொய்க்குதிரை
  • வேதாளம் சொன்ன கதை
  • மனித இயந்திரம்

76-103

[தொகு]
  • காலனும் கிழவியும்
  • நாசகாரக் கும்பல்
  • நினைவுப் பாதை
  • ?
  • நியாயந்தான்
  • உபதேசம்
  • புரட்சி மனப்பான்மை
  • அபிநவ ஸ்நாப்
  • மனக்குகை ஓவியங்கள்
  • விபரீத ஆசை
  • சாமியாரும் குழந்தையும் சீடையும்
  • மகாமசானம்
  • காஞ்சனை
  • செல்லம்மாள்
  • சாப விமோசனம்
  • கட்டிலை விட்டிறங்காக் கதை
  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  • சுப்பையா பிள்ளையின் காதல்கள்
  • சித்தி
  • சிவசிதம்பர சேவுகம்
  • நிசமும் நினைப்பும்
  • எப்போதும் முடிவிலே இன்பம்
  • நிர்விகற்ப சமாதி
  • அன்று இரவு
  • கபாடபுரம்
  • படபடப்பு
  • அவதாரம்
  • கயிற்றரவு

இவற்றையும் காண்க

[தொகு]