உள்ளடக்கத்துக்குச் செல்

புசு திமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புசு திமா
அதிகாரப்பூர்வ பெயர்புசு திமா
பிற பெயர்(கள்)புசு திமா, பிசு திமா , புசோவ் திமா
கடைபிடிப்போர்திமாசா மக்கள்
வகைஅறுவடை திருவிழா
கொண்டாட்டங்கள்பைக்கோ
தொடக்கம்27 ஜனவரி
முடிவு29 ஜனவரி
நாள்27 & 29 ஜனவரி
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனஅறுவடை

புசு திமா (பிஷு திமா ) என்பது இந்தியா வில் உள்ள அசாம் மற்றும் நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடி இனமான திமாசாவினரால் ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.[1] இந்த பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் தானிய அறுவடை முடிந்த பிறகு பொதுவாக ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. [2]

நடனம்

[தொகு]

மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திமாசா பழங்குடி சமூகத்தினர் அனைவரும்  தங்கள் கலாச்சாரத்தின் பாரம்பரிய உடையை அணிந்து தங்களின் நாட்டுப்புற இசைக்கருவிகளான 'க்ரம்' எனப்படும் மத்தள வாத்தியங்கள், 'முர்ரி' எனப்படும் காற்றிசை கருவிகள், புல்லாங்குழல் போன்ற 'சுபின்' மற்றும் டுபங்' போன்றவைகளை இசைத்து பாடல்கள் பாடி ஒன்றாக நடனமாடுவார்கள். ''முர்ரி'' இசைக்கருவிகள் முதல் நாளில் இருந்து கடைசி நாளான மூன்றாம் நாள் வரை தொடர்ச்சியாக இசைக்கப்படவேண்டும் என்பது ஒரு சடங்காகும். சிறுவர், சிறுமியர் தங்கள் பாரம்பரிய உடையுடன் வந்து திருவிழாவில் நடனமாடி இரவு முழுவதும்  கொண்டாடுவார்கள்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Busu Dima festival begins in Dima Hasao". The Times of India (in ஆங்கிலம்). January 29, 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
  2. "Festivals | Dima Hasao District | Government Of Assam, India". dimahasao.assam.gov.in. Archived from the original on 2021-10-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
  3. "Busu Dima festival celebrated". Assam Times (in ஆங்கிலம்). 2014-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசு_திமா&oldid=3701067" இலிருந்து மீள்விக்கப்பட்டது