பிரேமாபாய் அரங்கம்
பிரேமாபாய் அரங்கம் | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | புரூட்டலிசுட்டு கட்டடக் கலை |
இடம் | அகமதாபாது |
நிறைவுற்றது | 1972 |
உரிமையாளர் | குசராத்து வித்யா சபா |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | பி.வி. தோசி |
அமைப்புப் பொறியாளர் | மகேந்திர இராச்சு |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 1,000 |
பிரேமாபாய் அரங்கம் (Premabhai Hall) இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் கைவிடப்பட்ட ஓர் அரங்கமாகும். [1] அரங்கம் குசராத்து வித்யா சபைக்கு சொந்தமானதாகும். [2] [3]
வரலாறு
[தொகு]ஆங்கிலேயர் காலத்தில், இந்த அரங்கம் நாடக நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் பிரேமாபாய் அரங்கம் மறுவடிவமைப்பு செய்ய முன்மொழியப்பட்டது. இத்திட்டத்திற்காக பி.வி. தோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் புரூட்டலிச கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. [4]
1990 ஆம் ஆண்டுகளில் தீயணைப்பு ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக அரங்கம் கைவிடப்பட்டது. தோல்வியடைந்த இடிப்புத் திட்டம் கைவிடப்பட்டாலும் கட்டிடம் அப்படியே உள்ளது. [4]
விளக்கம்
[தொகு]இந்த அரங்கம் புரூட்டலிச கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது, முழு அமைப்பும் வலுவூட்டப்பட்ட கற்காரையால் கட்டப்பட்டுள்ளது. அரங்கத்தில் 1000 பேர் அமரும் வசதி கொண்டது.[2]