பிரேமாபாய் அரங்கம்
| பிரேமாபாய் அரங்கம் | |
|---|---|
![]() | |
| பொதுவான தகவல்கள் | |
| கட்டிடக்கலை பாணி | புரூட்டலிசுட்டு கட்டடக் கலை |
| இடம் | அகமதாபாது |
| நிறைவுற்றது | 1972 |
| உரிமையாளர் | குசராத்து வித்யா சபா |
| வடிவமைப்பும் கட்டுமானமும் | |
| கட்டிடக் கலைஞர்(கள்) | பி. வி. தோசி |
| அமைப்புப் பொறியாளர் | மகேந்திர இராசு |
| பிற தகவல்கள் | |
| இருக்கை திறன் | 1,000 |
பிரேமாபாய் அரங்கம் (Premabhai Hall) இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கைவிடப்பட்ட ஓர் அரங்கமாகும்.[1] இந்த அரங்கம் குசராத்து வித்யா சபைக்கு சொந்தமானதாகும்.[2][3]
வரலாறு
[தொகு]பிரேமாபாய் அரங்கம் ஆங்கிலேயர் காலத்தில் மேடை நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. 1956-இல் பிரேமாபாய் அரங்கம் மறுவடிவமைப்பு செய்ய முன்மொழியப்பட்டது. இத்திட்டத்திற்காக பி. வி. தோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் புரூட்டலிச கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.[4]
1997-ஆம் ஆண்டு, பிரேமாபாய் அரங்கம் தீயணைப்பு ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக அரங்கம் மூடப்பட்டது. இந்த அரங்கத்தை இடிக்கும் திட்ட முன்மொழிவு நிறைவேறாத நிலையில், கட்டிடம் அப்படியே உள்ளது.[4]
விளக்கம்
[தொகு]பிரேமாபாய் அரங்கம் புரூட்டலிச கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. முழு அமைப்பும் வலுவூட்டப்பட்ட கற்காரையால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் 1000 பேர் அமரும் வசதி இருந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Doshi, Balkrishna V; Prakash, Vikramaditya; Pratik, Desai,; Rajiv, Kathpalia, (1972). "Premabhai Hall" (in en). Bhadra Square Redevelopment Plan. https://architexturez.net/doc/az-cf-172374.
- ↑ 2.0 2.1 Devarhubli, Chaitra. "Premabhai hall: AMC offers Rs10 crore, trust wants Rs30 crore". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2025-04-30.
- ↑ "Premabhai Hall to become AMC city civic centre".
- ↑ 4.0 4.1 Patel, Shailja. "Premabhai Hall: Reinvigorating Public Realm" (PDF).
