உள்ளடக்கத்துக்குச் செல்

பிருத்திவிராச் சௌகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருத்திவிராஜ் சௌகான்
பிறப்புபொ.ஊ. 1149
இறப்புபொ.ஊ. 1192 (அகவை 43)
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்மூன்றாம் பிருத்திவி ராஜ்
பணிஅஜ்மீர் மற்றும் தில்லியின் அரசன் (பொ.ஊ. 12-ம் நூற்றாண்டு)
அஜ்மீரில் உள்ள பிரித்திவிராஜ் சௌகானின் சிலை

பிருத்திவிராஜ் சௌகான் (Prithviraj Chauhan) (பொ.ஊ. 1168-1192), 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்த இராச்சியம் ஒன்றை ஆண்ட இந்து இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆவார். தில்லி அரியணையில் இருந்த கடைசிக்கு முந்திய இந்து மன்னன் இவராவார். பொ.ஊ. 1179 ஆம் ஆண்டில், தனது 13 வயதில் ஆட்சிக்கு வந்த பிரித்திவிராஜ், இரட்டைத் தலைநகரங்களான அஜ்மீர், டில்லி ஆகிய நகரங்களிலிருந்து ஆட்சி நடத்தினார். இவர், இன்றைய இராசசுத்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்த நாட்டை ஆண்டதுடன், முசுலிம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இராசபுத்திரரை ஒன்றுபடுத்தினார்.[1]

கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் பிரித்திவிராஜ் கொண்ட காதல் வட இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு காதல் கதை ஆகும். பிரித்திவிராஜின் அரசவைப் புலவரும், அவரது நண்பருமான சந்த் பார்தாய் என்பவர் எழுதிய பிரித்திவிராஜ் ராசோ என்னும் காவியத்தின் கருப்பொருளும் இதுவே.

பிரித்திவிராச், ஆப்கானிய மன்னனான கோரி முகமதுவை 1191 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதல் தாரைன் போரில் தோற்கடித்தார். ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் கோரி தாக்கியபோது இடம்பெற்ற இரண்டாம் தாரைன் போரில் பிரித்திவிராச் தோல்வியடைந்தார். இவரது தோல்விக்குப் பின்னர் வட இந்தியா முசுலிம்களின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு டில்லி அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டில்லியில் உள்ள கிலா ராய் பித்தோரா என்னும் பெயர் இவரது பெயரைத் தழுவி இடப்பட்டது ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.britannica.com/EBchecked/topic/480820/Prithviraja-III

இதனையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருத்திவிராச்_சௌகான்&oldid=4056211" இலிருந்து மீள்விக்கப்பட்டது