பிரிட்டிஷ் ஏர்வேஸ்
BA என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரித்தானிய ஏர்வேஸ் (British Airways) ஐக்கிய இராச்சியத்தின் விமானச் சேவையாகும். இதன் விமானக்குழுவின் அளவு, சர்வதேச விமானங்கள் மற்றும் சர்வதேச இலக்குகள் ஆகியவற்றினைப் பொறுத்து இது மிகப்பெரிய விமானச் சேவை என்ற பெயரினைப் பெற்றுள்ளது. லண்டனில் ஈஸிஜெட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, அதிகப்படியான பயணிகளைக் கொண்ட விமானச் சேவை இதுவாகும். லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்தினைத் தலைமை மையமாகக் கொண்டு பிரித்தானிய ஏர்வேஸ் செயல்படுகிறது.
பிரித்தானிய ஏர்வேஸ் அமைப்பு ஐக்கிய இராச்சிய அரசால் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய ஓவர்சீஸ் ஏர்வேஸ் கார்பரேஷன் மற்றும் பிரித்தானிய ஐரோப்பியன் ஏர்வேஸ் மற்றும் இரு சிறிய உள்ளக விமானச் சேவைகளான கார்டிஃபில்லில் உள்ள காம்ப்ரியன் ஏர்வேஸ் மற்றும் நியூகேஸ்ட்லே அபான் டைனில் உள்ள நார்த்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் ஆகிய விமானச் சேவைகளை நிர்வகிப்பது இதன் முக்கியப்பணியாக இருந்தது. மார்ச் 31, 1974 இல் இந்த நான்கு விமானச் சேவைகளும் பிரித்தானிய ஏர்வேஸ் உடன் மொத்தமாக இணைந்தன.[1]
உயர்தர வழித்தடங்கள்
[தொகு]பிரித்தானிய ஏர்வேஸ் உயர்தர வழித்தடங்களாக நியூயார்க் – மியாமி, லண்டன் – டப்ளின், மியாமி – நியூயார்க் மற்றும் டப்ளின் – லண்டன் ஆகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 154, 142, 134 மற்றும் 131 விமானங்களை இயக்குகிறது. பயணிகள் விமானங்கள் தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானங்களை கார்டிஃப் – மலகா மற்றும் அலிகேன்டே – கோபென்ஹகென் ஆகிய வழித்தடங்களுக்குக் கொண்டுள்ளது.[2]
இலக்குகள்
[தொகு]பிரித்தானிய ஏர்வேஸ் 160 இலக்குகளுக்கும் மேலாக விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. இதில் ஆறு உள்நாட்டு விமானச் சேவைகளும் அடங்கும். மக்கள் வசிக்கும் ஆறு கண்டங்களுக்கும் [3] விமானச் சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்கள் சில மட்டுமே, அவற்றுள் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்று. இதனை டெல்டா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், எடிஹட் ஏர்வேஸ், கொரியன் ஏர், குவாண்டாஸ், கத்தார் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தென்னாப்பிரிக்கா ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் துணையுடன் செயல்படுத்துகிறது.
சிறு விபத்து
[தொகு]2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலிருந்து பிரிட்டனின் தலைநகரான லண்டனுக்கு புறப்பட்ட இந்த நிருவனத்தின் விமானம் தீப்பிடித்தது. இதில் இரண்டு பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது மற்றவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.[4]
கூட்டுப் பங்காண்மை மற்றும் கோட்ஷே ஒப்பந்தங்கள்
[தொகு]பிரித்தானிய ஏர்வேஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கூட்டுப்பங்காண்மை மற்றும்/அல்லது கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[5]
- 1. ஏர் லிங்கஸ்
- ஏர்பால்டிக்
- ஏர் பெர்லின்
- அலாஸ்கா ஏர்லைன்ஸ்
- அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
- பாங்காக் ஏர்வேஸ்
- கதே பசுபிக்
- ஃபின்னையர்
- ஃபிளைபி [6]
- கல்ஃப் ஏர்
- இபேரியாஅ
- ஜப்பான் ஏர்லைன்ஸ்
- ஜெட்புளூ
- லேன் ஏர்லைன்ஸ்
- லோங்கனாய்ர்
- மலேசியா ஏர்லைன்ஸ்
- மெரிடியன் ஃபிளை
- குவாண்டாஸ்
- கத்தார் ஏர்வேஸ்
- ராயல் ஜோர்டானியன்
- எஸ்7 ஏர்லைன்ஸ்
- டேம் ஏர்லைன்ஸ்
- யுஎஸ் ஏர்வேஸ் [7]
- உயெல்லிங்க்
- வெஸ்ட்ஜெட்
குறிப்புகள்
[தொகு]- ↑ "History Of British Airways". wikipedia.
- ↑ "British Airways". cleartrip.com. Archived from the original on 2016-05-04.
- ↑ "Ask the Pilot: Welcome to the Six Continent Club!". Salon. Archived from the original on 2009-07-14.
- ↑ British Airways plane catches fire at Las Vegas airport தி கார்டியன் 09 செப்டம்பர் 2015
- ↑ "franchises". Flybe. பார்க்கப்பட்ட நாள் 6.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "US Airways joins transatlantic JV; adds British Airways codeshare". Air Transport World.