பியர்சன் குறியீடு
பியர்சன் குறியீடு அல்லது பியர்சன் குறியீட்டு முறை (The Pearson symbol, or Pearson notation) என்பது படிகவியலில் ஒரு படிகத்தின் அமைப்பை விவரிக்கின்ற முறையாகும். டபிள்யூ.பி. பியர்சன் இம்முறையைத் தோற்றுவித்தார்[1] . இக்குறியீட்டில் இரண்டு எழுத்துக்களும் அவற்றைத் தொடர்ந்து ஒரு எண்ணும் கொண்ட ஒரு குறியீட்டு முறையாகும். உதாரணமாக, வைர அமைப்பு - cF8 உரூத்தைல் அமைப்பு - tP6 இரண்டு சாய்வெழுத்துகளும் பிராவைசு அணிக்கோவையைக் குறிப்பிடுகின்றன. அடித்தட்டு எழுத்து படிக வகையையும் மேல்தட்டு எழுத்து அணிக்கோவை வகையையும் குறிப்பிடுகின்றன. ஓர் அலகு கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை எண்மதிப்பு குறிப்பிடுகிறது. ஐயுபிஏசி (2005) [2]
a | முச்சரிவு |
m | ஒற்றைச் சரிவு |
o | செஞ்சாய்சதுரம் |
t | நாற்கோணம் |
h | அறுகோணம் மற்றும் சாய்சதுரம் |
c | கனசதுரம் |
S,A,B,C | பக்க முகமையம் |
F | அனைத்து முகமையம் |
I | உடல் மையம் [3] |
R | சாய்சதுரம் |
P | முதனிலை |
முன்னதாக S என்ற எழுத்துக்குப் பதிலாக A, B மற்றும் C முதலியன பயன்படுத்தப்பட்டன. மையமாக்கலில் ஒரிணை எதிரெதிர் முகங்களை X -- அச்சு கொண்டிருந்தால் அதை A- மையம் என்றும் Y- மற்றும் Z- அச்சுகளில் சம மையம் கொண்டிருந்தால் முறையே B- மற்றும் C- மைய என்றும் குறிக்கப்பட்டன.[3]
14 வகையான வாய்ப்புள்ள பிராவைசு அணிக்கோவைகள் முதல் இரண்டு எழுத்துகளால் அடையாளம் காணப்படுகின்றன:
படிக வகை | அணிக்கோவை குறியீடு | பியர்சன் குறியீட்டு எழுத்துகள் |
---|---|---|
Tமுச்சரிவு | P | aP |
ஒற்றைச் சரிவு | P | mP |
S | mS | |
செஞ்சாய்சதுரம் | P | oP |
S | oS | |
F | oF | |
I | oI | |
நாற்கோணம் | P | tP |
I | tI | |
அறுகோணம் (மற்றும் முக்கோணம்) | P | hP |
சாய்சதுரம் | R | hR |
கனசதுரம் | P | cP |
F | cF | |
I | cI |
பியர்சன் குறியீடு மற்றும் இடக்குழு
[தொகு]பியர்சன் குறியிடு படிக அமைப்புகளின் இடக்குழுவை தனித்துவமாக அடையாளம் காட்டவில்லை. உதாரணமாக, சோடியம் குளோரைடின் இரண்டு வகை படிக அமைப்புகளும் (இடக்குழு Fm3m) மற்றும் வைர அமைப்பு இடக்குழு Fd3m) பியர்சன் குறியீடு cF8 என்றே உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ W.B. Pearson, A Handbook of Lattice Spacings and Structures of Metals and Alloys,Vol. 2, Pergamon Press, Oxford, 1967
- ↑ Nomenclature of Inorganic Chemistry IUPAC Recommendations 2005; IR-3.4.4, pp.49-51; IR-11.5, pp.241-242
- ↑ 3.0 3.1 page 124 in chapter 3. Crystallography: Internal order and symmetry in Cornelius Klein & Cornelius S. Hurlbut, Jr.: Manual of Mineralogy, 21st edition, 1993, John Wiley & Sons, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-59955-7