உள்ளடக்கத்துக்குச் செல்

பி. ஓர். & சன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஓர். & சன்ஸ்
நிறுவனர்(கள்)பீட்டர் ஓர்
தலைமையகம்சென்னை
உற்பத்திகள்கைவினைப்பொருள்கள், கடிகாரங்கள்
உரிமையாளர்கள்லாயல் குழு
பி.ஓர் & சன்ஸ் தயாரித்த ஆரம்ப காலப்பொருள்

பி. ஓர் & சன்ஸ் (P.Orr & Sons) இந்தியாவில் தமிழகத்தில் சென்னை நகரை மையமாகக் கொண்ட, கைக்கடிகாரங்கள் மற்றும் சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கின்ற ஒரு நிறுவனத் தொகுப்பு ஆகும். இது முதன் முதலில் கடிகாரங்களை தயாரிக்க ஆரம்பித்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓர் என்பவரால் 1846 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார்டன் & கோ தளத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது.[1][2]

வரலாறு

[தொகு]
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பி. ஓர் & சன்ஸ் காட்சியறை,

பி. ஓர் & சன்ஸ் நிறுவனத்தின் முதல் ஷோரூம் எனப்படுகின்ற காட்சியறை 1879 ஆம் ஆண்டில் அண்ணா சாலையில் திறந்து வைக்கப்பட்டது, இது சென்னையில் தற்போதும் இயங்கி வருகின்ற ஒரு பாரம்பரிய கட்டிடமாகவும் இருந்து வருகிறது. இந்த கட்டிடத்தை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, கெடிகாரங்கள் தயாரிப்பாளரான பீட்டர் ஓர் அமைத்தார். சென்னை அரசின் ஆலோசனைக் கட்டிடக் கலைஞரான ராபர்ட் சிசோம் இந்தக் கட்டடத்திற்கான வடிவத்தை அமைத்தார்.[3] இதை பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் பொறுப்பேற்ற டியூக் ஆஃப் யார்க் இளவரசர் ஜார்ஜும் பின்னர் ராணி மேரி பொறுப்பேற்ற டெக்கின் இளவரசி மேரி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த கடை ஆரம்பத்தில் வைரங்கள், உபகரணங்கள், துப்பாக்கிகள், வெள்ளிப்பொருள்கள் ஆகியவற்றின் விற்பனையில் ஈடுபட்டது. பின்னர் இயந்திரத்தில் இயங்கும் கைக்கடிகாரங்கள் மற்றும் சுவர்க்கடிகாரங்களை விற்கத் தொடங்கியது. முதல் ரோலக்ஸ் கடிகாரம் இந்தியாவில் இங்குதான் விற்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் 1967 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற டெக்ஸ்டைல் மில் அதிபரான கருமுத்து தியாகராஜன் செட்டியாரிடம் விற்கப்பட்டது. தற்போது இந்தக் கடைகளின் தொகுப்பு அவரது லாயல் டெக்ஸ்டைல்ஸ் குழுவின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது.

பாரம்பரிய கட்டிடம்

[தொகு]

சென்னை மெட்ரோ சில பகுதிகளை இடிக்க முன்மொழிந்தபோது அண்ணா சாலையில் உள்ள பி. ஓர். & சன்ஸ் கடை சர்ச்சைக்குள்ளானது. இருந்த போதிலும் உரிமையாளர்கள் இந்த கடை ஒரு பாரம்பரிய தளம் என்றும் அதில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ள முடியாது என்றும் வாதிட்டனர்.[4][5] இது ஒரு பாரம்பரிய தளம் என்பதை நிரூபிக்க போதுமான உரிய சான்றுகள் தரப்படாத நிலையில்சென்னைஉயர்நீதிமன்றம் இதன் சில பகுதிகளை இடிப்பதற்கு ஆதரவளித்தது,[6][7] சென்னை மெட்ரோ இதன் சில பகுதிகளை இடிக்க ஆரம்பித்தபோது அதன் பிற பகுதிகளுக்கு சேதம் உண்டானது. மேலும் 2013 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மேலும் 894 சதுர அடி கட்டிடத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக இடிக்கக் கோரியது.[8] பி.ஓர் & சன்ஸ் சேதமடைந்த கட்டடக் பகுதிகளை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தது. மேலும் மாநகராட்சியின் ஆணையைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. நவம்பர் 2014 இல், நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஆதரவாக கட்டிடத்தின் மேலும் சில பகுதிகளை இடிக்க ஆணை வழங்கியது.

விற்பனை

[தொகு]

இந்நிறுவனம் தொடர்ந்து அனைத்து வகையான கெடிகாரங்களையும் விற்பனை செய்து வருகிறது. இதனை 168 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது.[9] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்திய மற்றும் வெளிநாட்டு கெடிகாரங்கள், அலாரம் வைத்த கடிகாரங்கள், தாத்தா அணியும் கடிகாரங்கள், மணிக்கூண்டு கடிகாரங்கள், கால அளவினைக் கொண்டு அமைந்துள்ள கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை நவீன காலத்தேவைக்கேற்ப விற்பனை செய்கிறது.[10]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. JANANE VENKATRAMAN, ANUSHA PARTHASARATHY (2012-12-13). "Survivors of Time: P.Orr & Sons — Timekeepers of Madras, since 1849". The Hindu. http://www.thehindu.com/arts/history-and-culture/article2711862.ece. பார்த்த நாள்: 2012-07-07. 
  2. BISHWANATH GHOSH (2012-11-03  ). "The Sunday Diary: A city in the ink of health". The Hindu இம் மூலத்தில் இருந்து 2012-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120312115317/http://www.thehindu.com/news/cities/chennai/article2982734.ece. பார்த்த நாள்: 2012-07-07. 
  3. "Peter Orr & Sons [Madras] - Mantel clock". பார்க்கப்பட்ட நாள் 2018-07-27.
  4. A. SRIVATHSAN ALOYSIUS XAVIER LOPEZ (2012-03-18). "P. Orr & Sons to lose a chunk". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article3007251.ece. பார்த்த நாள்: 2012-07-07. 
  5. "Rear portion of P Orr to be demolished". Times Of India. 2012-05-04 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103202820/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-05/chennai/31293488_1_intach-heritage-building-indian-national-trust. பார்த்த நாள்: 2012-07-07. 
  6. "Court reserves order on P. Orr & Sons demolition". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article3017604.ece. பார்த்த நாள்: 2012-07-07. 
  7. "P.Orr and Sons opens renovated showroom". The Hindu. 2012-06-17 இம் மூலத்தில் இருந்து 2011-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110620205917/http://www.hindu.com/2011/06/17/stories/2011061764740800.htm. பார்த்த நாள்: 2012-07-07. 
  8. Raj (2014-11-14). "Madras high court clears demolition of part of P Orr & Sons building". https://timesofindia.indiatimes.com/city/chennai/Madras-high-court-clears-demolition-of-part-of-P-Orr-Sons-building/articleshow/45142229.cms. பார்த்த நாள்: 2018-07-27. 
  9. "P.ORR & SONS, Heritage". Archived from the original on 2019-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  10. "P.ORR & SONS, Profile". Archived from the original on 2019-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஓர்._%26_சன்ஸ்&oldid=3563162" இலிருந்து மீள்விக்கப்பட்டது