பால்சமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பா'அல் கோயில்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ஆகத்து 2015இல் அழிக்கப்படுபடுவதற்கு முன்பாக பல்மைராவிலுள்ள பால்சமீன் கோயில்
இடம்சிரியா
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iv
உசாத்துணை23
UNESCO regionஅரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (1980) (4வது தொடர்)
ஆபத்தான நிலைபோர்
அக்ளிபோல், பால்சமீன் (நடு), மற்றும் மாலக்பெல் (முதல் நூற்றாண்டு; பல்மைரா அருகில், சிரியா)

பால்சமீன் (Baalshamin) அல்லது பா'அல் சமெம் (Ba'al Šamem)[1] (அரமேயம்: ܒܥܠ ܫܡܝܢ), பொருள்: 'சொர்க்கத்தின் பிரபு', வடமேற்கு செமத்திய இனக் கடவுளாக அறியப்படுகின்றார். மத்திய கிழக்கின் வெவ்வேறு இடங்களுக்குத் தகுந்தபடி அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் இப்பட்டம் பல்வேறு கடவுளருக்கு உரித்தாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கேனான்/போனீசியா, சிரியா தொல்லியல் கல்வெட்டுக்களில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இது பெரும்பாலும் இடி/மழை கடவுளான அடாடுக்கு (பால்/ பா‘அல்) பயன்படுத்தப்படுகின்றது. பால்சமீன் இசுலாமியத்திற்கு முன்பான பல்மைராவில் கொண்டாடப்பட்ட இரு கடவுள்களில் ஒருவராவார். மற்ற முதன்மைக் கடவுள் பெல் ஆவார்.[2]கழுகும் மின்னல் கொடியும் இவரது சிறப்புக்கூறுகளாக உள்ளது. நிலாக் கடவுளான அக்ளிபோல், சூரியக் கடவுளான மாலக்பெல் ஆகியோருடன் இவரும் இணைந்து முக்கடவுளராக வழிபடப்பட்டனர்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. நூல்களில் சிரியாவின் கடவுளாகவும் போனீசியக் கடவுளாகவும் இவ்வாறே முறையாக அழைக்கப்படுகிறார். மற்ற பெயர்கள் வருமாறு: பா'அல் ஷமீன், பா'அல்-ஷமெம், பா'அல் ஷமீம், பால் ஷமெம்
  2. Dirven, Lucinda (1999). The Palmyrenes of Dura-Europos: A Study of Religious Interaction in Roman Syria. BRILL. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11589-7. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  3. Kaizer, Ted (2002). The Religious Life of Palmyra: A Study of the Social Patterns of Worship in the Roman Period. Franz Steiner Verlag. pp. 87, 88, 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-515-08027-9. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

  • Kaizer, Ted: The religious life of Palmyra. Stuttgart: Franz Steiner Verlag, 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்சமீன்&oldid=3657998" இலிருந்து மீள்விக்கப்பட்டது